குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசுத் துணைத்தலைவர் அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு மே 3-ல் பயணம்
Posted On:
02 MAY 2023 5:28PM by PIB Chennai
குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் ஒரு நாள் பயணமாக மே 3, 2023 அன்று அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு செல்லவுள்ளார்.
அசாமில் குடியரசுத் துணைத்தலைவர்
முற்பகலில் குடியரசுத் துணைத் தலைவர் அசாம் மாநிலம் திப்ரூகர் செல்கிறார். திப்ரூகர் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு உரை நிகழ்த்த உள்ளார்.
மணிப்பூரில் குடியரசுத் துணைத் தலைவர்
பிற்பகலில் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள தனமஞ்சூரி பல்கலைக்கழகம் செல்லவுள்ளார். அங்கு அவர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாட உள்ளார்.
பின்னர் மணிப்பூர் பல்கலைக்கழகம் செல்லும் திரு தன்கர், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மத்தியக் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் உரையாட உள்ளார்.
***
AD/IR/RS/KPG
(Release ID: 1921440)
Visitor Counter : 188