ஆயுஷ்

ஜெய்ப்பூரில் நடந்த 'யோகா பெருவிழா ' நிகழ்ச்சியில் 15,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Posted On: 02 MAY 2023 1:41PM by PIB Chennai

2023 ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்திற்கு இன்னும்  50 நாட்களே உள்ளதைக் குறிக்கும் வகையில், ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற யோகா பெருவிழாவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  

இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா கலந்து கொண்டார். மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து  மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு  சர்பானந்த சோனோவால்; மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்; மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர், திரு அர்ஜுன் ராம் மேக்வால்; மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திரு கைலாஷ் சௌத்ரி; ஆயுஷ், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை  இணை அமைச்சர், டாக்டர் முன்ஜ்பரா மகேந்திரபாய் கலுபாய் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா, “யோகா மற்றும் ஆயுர்வேதத்திற்கு பல நூற்றாண்டுகள் பழமையான வரலாறு உண்டு. பழமையான புனித நூல்களில் ஒன்றான ரிக் வேதத்தில் யோகா பற்றிய முதல் குறிப்பு இருந்தது. இந்த ஆன்மீக ஒழுக்கம் ஒரு நுட்பமான அறிவியலை அடிப்படையாகக் கொண்டது, இது உடலுக்கும் மனதுக்கும் இடையில் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முழு உலகமும் கோவிட்-19 வடிவத்தில் ஒரு கடினமான காலத்தை கடந்து வந்த போது,  யோகா மற்றும் ஆயுர்வேதம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவியது. யோகாவின் 50வது நாள் கவுண்ட்டவுனின் இந்த பிரம்மாண்டமான நிகழ்வில் கலந்து கொண்டதில்  நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்’’ என்று கூறினார். 

கூட்டத்தில் உரையாற்றிய திரு சர்பானந்த சோனோவால், "இன்று, இந்த வரலாற்று நகரமான ஜெய்ப்பூரில், யோகாவின் செழுமையான பாரம்பரியத்துடன், இந்த யோகா பெருவிழா நிகழ்வை மாபெரும் வெற்றியடையச் செய்துள்ளது. நீங்கள் ஆயிரக்கணக்கானோர் இங்கு சேர்ந்துள்ளீர்கள். இந்த பெருவிழாக்கள்  மூலம் நமது முயற்சியானது யோகாவின் செழுமையான பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதாகும். ஆரோக்கியமான மனதையும் உடலையும் உணர யோகா ஒரு அமுதமாக செயல்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, யோகா உள்ளிட்ட நமது வளமான பாரம்பரிய மருத்துவ முறையின் உதவியுடன் ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்புவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த ஆண்டுக்கான ஜி20 மாநாட்டில் இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், நமது மென் சக்தியை மேலும் மேம்படுத்தும் சிறப்புப் பொறுப்பு நமக்கு  உள்ளது’’ என்று கூறினார்.

----- 

AD/PKV/KPG



(Release ID: 1921401) Visitor Counter : 123


Read this release in: English , Urdu , Hindi , Marathi