நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் தூய்மை இந்தியா முகாம்

प्रविष्टि तिथि: 01 MAY 2023 3:52PM by PIB Chennai

மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், 2023ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை, தூய்மை இருவார முகாமை நடத்தியது. தூய்மையான மற்றும் சுத்தமான இந்தியா என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் நோக்கில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்,  பிரதமர் நரேந்திர மோடியின் முழுமுயற்சியின்படி, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதி 15 நாட்களில் இந்த தூய்மை முகாமை நடத்தியது. இதனை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு. குடே ஸ்ரீனிவாஸ் கடந்த ஏப்ரல் 17ம் தேதி தொடங்கிவைத்தார்.

இந்த முகாமின் ஒருபகுதியாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களைக் கொண்டு, தூய்மை உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தூய்மை முகாமில், 92 ஆவணங்கள் அடையாளம் காணப்பட்டு அதில் இருந்து 32 ஆவணங்கள் நீக்கப்பட்டதுடன், தேவையில்லாதவை என அடையாளம் காணப்பட்டப் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டு ரூ.67,900 வருவாய் ஈட்டப்பட்டது.

                                                          ***

AD/ES/AG/KPG

 


(रिलीज़ आईडी: 1921208) आगंतुक पटल : 174
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi