தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மனதின் குரல் 100வது அத்தியாயத்தின் சிறப்பு திரையிடல் மும்பை ராஜ்பவனில் நடைபெற்றது
Posted On:
30 APR 2023 2:13PM by PIB Chennai
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமரால் அடையாளப்படுத்தப்பட்ட மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள், பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் பிரபலங்கள் மகாராஷ்டிரா ஆளுநருடன் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது அத்தியாயத்தைக் கேட்டனர்.
மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது அத்தியாயம் ஒரு வகையில் இந்தியாவின் 2024க்கான பிரம்மாண்டமான தொடக்கமாகும். - மகாராஷ்டிர ஆளுநர் திரு ரமேஷ் பய்ஸ்
மனதின் குரல் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பல்வேறு தலைப்புகளை முன்னிலைப்படுத்துகிறது
100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி முதன்முதலில் 3 அக்டோபர் 2014 அன்று விஜயதசமியில் தொடங்கப்பட்டது. இந்த பிரபலமான நிகழ்ச்சியின் 100வது அத்தியாயம் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் பொழுது மகாராஷ்டிர ஆளுநர் திரு ரமேஷ் பய்ஸ் முன்னிலையில் மும்பை ராஜ்பவனில் சிறப்பு திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் பேசுகையில், "இன்று நாம் ஒரு சாதனையை கொண்டாடுகிறோம். அகில இந்திய வானொலியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சி இன்று 100வது அத்தியாயத்தை நிறைவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பரவியுள்ளது". 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் 100வது அத்தியாயம் ஒரு வகையில் இந்தியாவின் 2047க்கான பிரமாண்டமான தொடக்கமாகும், என்றார்.
பிரதமர் நேரடியாக நாட்டு மக்களுடன் தொடர்பு கொண்டு பேசும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய பங்கு குறித்து பேசிய மகாராஷ்டிர ஆளுநர், இந்த நிகழ்வு காதி, இந்திய பொம்மைத் தொழில், சுகாதாரத் துறையில் ஸ்டார்ட்அப்கள், ஆயுஷ் மற்றும் விண்வெளி போன்ற தொழில்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, என்றார். கோவிட்-19 தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது பிரதமர் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருடனும் இதன் மூலம் இணைப்பில் இருந்தார் என்றும் கூறினார்.
நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நிகழும் ஒவ்வொரு சமூக மாற்றத்திலும் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார் என்பதை மனதின் குரல் காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.
மனதின் குரல் சிறப்புத் திரையிடலையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை மகாராஷ்டிர ஆளுநர் திறந்து வைத்தார். பதிப்பகத் துறையின் புத்தகக் கண்காட்சியையும் பார்வையிட்டார். தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் பிரசார் பாரதி இணைந்து இந்த சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்திருந்தன.
***
AP/CJL/DL
(Release ID: 1920958)
Visitor Counter : 2067