கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
இந்திய கடல்சார் துறை உலகின் சிறந்த நாடுகளுடன் போட்டியிட்டு முன்னேறுகிறது
Posted On:
28 APR 2023 5:08PM by PIB Chennai
உலக வங்கி சரக்குப் போக்குவரத்து குறியீட்டு எண் அறிக்கை 2023ன் படி, சரக்கை ஏற்றுவதற்கான அல்லது இறக்குவதற்கான இந்திய கண்டெய்னர்களின் சராசரி நேரம் மூன்று நாட்களாக உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் தென்னாப்பிரிக்காவில் இது 4 நாட்களாகவும், அமெரிக்காவில் 7 நாட்களாகவும், ஜெர்மனியில் 10 நாட்களாகவும் உள்ளது. பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ், ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமிடுதல் மற்றும் செயல்பாடு மூலம் போக்குவரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. கடற்சார் துறையில் அரசு மற்றும் தனியார் துறை கூட்டாண்மை மூலம் சர்வதேச சரக்கு கப்பல் துறையில் உலக தரவரிசையில் இந்தியா 22-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டின் சரக்குப் போக்குவரத்து செயல்பாட்டு குறியீட்டு தரவரிசையில், 38-வது இடத்தில் இந்தியா உள்ளது.
-------
AD/IR/RS/KRS
(Release ID: 1920593)
Visitor Counter : 158