கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

2022-23-ல் இந்தியாவின் பெரிய துறைமுகங்கள் படைத்துள்ள சாதனைகள் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாக உள்ளன – திரு.சர்பானந்த சோனோவால்

Posted On: 28 APR 2023 3:00PM by PIB Chennai

2023-ம் நிதியாண்டில் இந்தியாவில் பெரிய துறைமுகங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல்வேறு அளவுகோல்களில் செயல்திறனை நிரூபித்து புதிய சாதனைகளைப் படைத்துள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு.சபர்பானந்த சோனோவால் கூறியுள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான ஃபிக்கியின் இரண்டாவது மாநாட்டில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார். பெரிய துறைமுகங்கள் ஒட்டுமொத்தமாக 795 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனைப் படைத்துள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 10.4 சதவீதம் அதிகமாகும் என்று அவர் கூறினார். மேலும் சராசரியாக தினசரி 17,239 டன் சரக்குகளை கையாண்டும் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும். ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம், 6 மில்லியனுக்கும் அதிகமான பெட்டகங்களைக் கையாண்டு சாதனைப் படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதுவரை இல்லாத அளவுக்கு ஆண்டுக்கு 21,846 கப்பல்களை கையாண்டு சாதனைப் படைத்துள்ளதாக அவர் கூறினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியக் கப்பல் தொழில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ச்சியைக் கண்டுள்ளதாக திரு. சோனோவால் கூறினார். இந்தியக் கொடியின் கீழ் இயங்கும் கப்பல்களின் எண்ணிக்கையும் 2014 ஆம் ஆண்டு 1205 ஆக இருந்தது, 2023-ல் 1526 ஆக உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார். கப்பல்களின் எண்ணிக்கை, சரக்குகளின் அளவு, பணியமர்த்தப்பட்ட கப்பல் ஊழியர்களின் எண்ணிக்கை ஆகிய அனைத்திலும் வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெரிய துறைமுகங்களை, ஹைட்ரஜனை கையாளும் திறன் படைத்ததாக மாற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த திரு. சோனோவால். பசுமை ஹைட்ரஜனை கையாளுவதற்கு தேவையான உள்கட்டமைப்புகளை பாரதீப் தீன்தயாள், வ.உ.சிதம்பரனார் துறைமுகங்கள் உருவாக்கி வருவதாக கூறினார்.

****


(Release ID: 1920518)

AD/PKV/RR/KRS



(Release ID: 1920551) Visitor Counter : 132