அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்தியாவும் பிரிட்டனும் 'கரியமிலவாயு பூஜ்ய நிலை'க்கான புதிய கண்டுபிடிப்பு மெய்நிகர் மையத்தை கூட்டாக உருவாக்க உள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்

Posted On: 27 APR 2023 3:28PM by PIB Chennai

இந்தியாவும் பிரிட்டனும் 'கரியமிலவாயு பூஜ்ய நிலை'க்கான புதிய கண்டுபிடிப்பு மெய்நிகர் மையத்தை கூட்டாக உருவாக்க உள்ளது.

லண்டனில் இன்று இந்தியா-பிரிட்டன் அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்பு கவுன்சில் கூட்டத்தில்  மத்திய அறிவியல்தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணைமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதனை அறிவித்தார்.  இந்தக் கூட்டத்திற்கு பிரிட்டனின் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ஜார்ஜ் ஃப்ரீமேன் கூட்டாக தலைமை தாங்கினார். இந்தியா-பிரிட்டன் இடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவாக்க இருதலைவர்களும் அழைப்பு விடுத்தனர்.

இந்தக் கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியா வெகுவேகமாக வளர்ந்து வருகிறது என்றும் பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் இலக்குகளை குறித்த நேரத்தில் நிறைவு செய்ய இந்திய உறுதிபூண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

சுகாதாரம், பருவநிலை, வர்த்தகம், கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆகியவற்றின் கட்டமைப்புக்காக உருவாக்கப்பட்ட செயல்திட்டம் 2030 மூலம், இந்தியா-பிரிட்டன் இடையேயான உறவுகளை வலுப்படுத்த இருநாடுகளும் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

கார்பன் உமிழ்வை வெகுவாக குறைத்து போக்குவரத்து அமைப்புகளில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை எரிசக்தியை ஊக்குவிக்க ஏதுவாக இரு நாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகளைக் கொண்ட புத்தாக்க மெய்நிகர் மையத்தை உருவாக்குவதற்கு கொண்டு வரப்பட்டுள்ள திட்டத்திற்கு இரு நாட்டு அமைச்சர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

வரும் ஜூலை 6-ந் தேதி மும்பையில் நடைபெறவுள்ள ஜி20 ஆராய்ச்சி அமைச்சர்கள் கூட்டத்திற்கு பிரிட்டிஷ் அமைச்சர் திரு.ஃப்ரீமேன்-க்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்தார். ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், நடப்பாண்டில் அறிவியல் எஸ்20 என்ற தலைப்பில் எண்ணற்ற கூட்டங்களை நடத்தி வருகிறது என்றும், இந்தக் கூட்டங்களில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அறிவியல் ஆலோசகர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றனர் என்றும், அந்த வகையில் இரு நாட்டு விஞ்ஞானிகளும் புத்தாக்கத்தை மேம்படுத்த தங்கள் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என அமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.

***

AD/SMB/RJ/KRS



(Release ID: 1920324) Visitor Counter : 184