மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

மருத்துவக் கருவிகள் துறைக்கான கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவ கருவிகள் துறையின் தற்போதுள்ள 11 பில்லியன் டாலர் என்பதிலிருந்து
50 பில்லியன் டாலர் வளர்ச்சிக்கு இந்தக் கொள்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Posted On: 26 APR 2023 7:33PM by PIB Chennai

மருத்துவக் கருவிகள் துறைக்கான கொள்கை 2023-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மருத்துவக் கருவிகள் துறை சுகாதாரத்துறையின் அத்தியாவசியமான ஒருங்கிணைந்த அமைப்பாக விளங்குகிறது. கொவிட்-19 பெருந்தொற்றின் போது சுவாசக்கருவிகள்,  பிபிஇ உடைகள், என்-95 முகக்கவசங்கள் போன்றவற்றின் தயாரிப்புக்கு இந்தத்துறை மிகப்பெரும் பங்களிப்பை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மருத்துவக் கருவிகள் துறைக்கான கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பொதுசுகாதார நோக்கங்களான எளிதில் கிடைத்தல், குறைந்த செலவில் தரமானதாக கிடைத்தல், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றை எதிர்கொள்ள முடியும். சீரான வளர்ச்சிக்கும் இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவித்து, மருத்துவக் கருவிகள் உற்பத்தியை மேற்கொள்வது மத்திய அரசின் தற்சார்பு இந்தியா, இந்தியாவில் உற்பத்தி ஆகியவற்றுக்கு உத்வேகம் அளிக்கும்.

நோயாளிகளை மையப்படுத்திய அணுகுமுறையை துரிதப்படுத்துவதோடு, உலகளாவிய சந்தையில் மருத்துவக் கருவிகள் உற்பத்தி மற்றும் புதிய கண்டுபிடிப்பில் இந்தியாவின் பங்கினை அடுத்த 25 ஆண்டுகளில்  10 முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவக் கருவிகள் துறையின் தற்போதுள்ள 11 பில்லியன் டாலர் என்பதிலிருந்து 50 பில்லியன் டாலர் வளர்ச்சிக்கு இந்தக் கொள்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

AD/SMB/AG/RJ

 


(Release ID: 1920033) Visitor Counter : 208