தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மனதின் குரல் @ 100 தேசிய மாநாட்டில் மகளிர் சக்தி குறித்த குழு விவாதம்
Posted On:
26 APR 2023 4:45PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்டவர்களை சென்றடைந்து தொடர்ந்து வெற்றி பெற்றதின் அடையாளமாக மனதின் குரல் குறித்த ஒரு நாள் தேசிய மாநாடு புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இவை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தலைமையில் குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜெக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். மனதின் குரல் நிகழ்ச்சியின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் குறிப்பிட்டு பேசிய 100-க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
“மகளிர் சக்தி”, “பாரம்பரியத்தை உயர்த்துதல்”, “பொது உரையாடல் மூலம் தன்னம்பிக்கை”, “பொதுமக்கள் இயக்கத்திற்கு அழைப்பு ஆகிய 4 தலைப்புகளில் குழு விவாதங்கள் நடைபெற்றன.”
தொடக்க அமர்வாக, மகளிர் சக்தி குறித்த அமர்வு நடைபெற்றது.
அப்போது பேசிய நடிகை ரவினா டாண்டன், உலகில் இந்திய மகளிர் தங்களுக்கு இருந்த தடைகளை உடைத்து முன்னேற்றம் பெற்றுள்ளதாக கூறினார். புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுனர் கிரண்பேடி பேசிய போது, மகளிருக்கு நிதி சுதந்திரம் அளிக்கப்பட்டு, அவர்களை தன்னிறைவு பெற்றவர்களாக மாற்றினால் மட்டுமே அவர்கள் வலிமையானவர்களாக உணர முடியும் என்று தெரிவித்தார்.
தி பெட்டர் இந்தியா நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான திரு தீமந்த்பரேக் பேசிய போது, மனதின் குரல் நிகழ்ச்சி வெற்றிகரமாக, நேர்மறையான மாற்றத்திற்கு உத்வேகம் அளிப்பதாகவும் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதாகவும் கூறினார். குத்துச்சண்டை வீராங்கனை நிக்கத் ஜரீன் பேசிய போது, முடிவுகளை பற்றி கவனத்தில் கொள்ளாமல் விளையாட்டு வீரர்களை விளையாடுவதற்கு பிரதமர் ஊக்கமளிப்பதாக குறிப்பிட்டார்.
***
AD/IR/RS/RR
(Release ID: 1919908)
Visitor Counter : 145