நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வங்கி சேவைகள் கிடைக்காதவர்களுக்கு சேவைகளை வழங்கவும், நிதி பாதுகாப்பு இல்லாதவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் வங்கிகள் பணியாற்ற வேண்டும் மத்திய இணையமைச்சர் திரு பகவத் கரத்

Posted On: 24 APR 2023 2:29PM by PIB Chennai

வங்கி சேவைகள் கிடைக்காதவர்களுக்கு சேவைகளை வழங்கவும், நிதி பாதுகாப்பு இல்லாதவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், நிதி உதவி கிடைக்காதவர்களுக்கு நிதியளிக்கும் நோக்கிலும் வங்கிகள் பணியாற்ற வேண்டும்  என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பகவத் கரத் வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சதாராவில் நிதி உள்ளடக்கம் தொடர்பான அளவீடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் இன்று (2023 ஏப்ரல் 24) அன்று பங்கேற்று அவர் பேசினார்.

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ், எந்தவிதமான பிணையும் இல்லாமல் தேவை உள்ளவர்களுக்கு சிறுகடன்கள் வழங்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். வங்கி சேவைகளை கிராமப்பகுதிகளில் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இலக்குகளை நிர்ணயித்து வங்கிகள் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

5 ட்ரில்லியன் பொருளாதார நாடாக இந்தியாவை மேம்படுத்தும் நமது இலக்கில் வங்கித்துறை முக்கிய தூணாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். சிறப்பு முகாம்கள் உள்ளிட்டவற்றை நடத்தி வங்கிச் சேவைகள் அதிகளவில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அனைவருக்குமான வளர்ச்சி என்ற கொள்கையில் வங்கித்துறை போட்டித்தன்மையுடன் செயலாற்ற வேண்டும் என்று திரு பகவத் கரத் கேட்டுகொண்டார்.

***

SM/PLM/RJ/RJ


(Release ID: 1919537) Visitor Counter : 103


Read this release in: English , Urdu , Marathi , Hindi