சுற்றுலா அமைச்சகம்

ஜெய்பூரில் மத்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் ஜி20 சுற்றுலா கண்காட்சி

Posted On: 24 APR 2023 3:35PM by PIB Chennai

மத்திய சுற்றுலா அமைச்சகம், சுற்றுலாத்துறையுடன் இணைந்து ராஜஸ்தானில் ஜி20 சுற்றுலா கண்காட்சிக்கு  ஏப்ரல் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்த கண்காட்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுற்றுலாத்துறை செயலாளர் திரு அரவிந்த் சிங், விடுதலையின் அமிர்தப் பெருவிழா கொண்டாட்டத்தின்  ஒரு பகுதியாகவும், ஜி20 நாடுகளுக்கு இந்தியாவின் தலைமைத்துவத்தை கொண்டாடும் வகையிலும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான தொலைநோக்குப்பார்வையின் அடிப்படையில். சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

நாடு முழுவதும் 50 புதிய சுற்றுலா தளங்களை உருவாக்கவும், மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் 59 புதிய வான் வழித்தடங்களையும் உருவாக்கி சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.

ஜி20 நாடுகளுக்கு இந்தியாவின் தலைமைத்துவம் சுற்றுலாத்துறையை ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வலிமையான நாடாக வலுப்பெற செய்திருப்பதாக கூறினார். பசுமை சுற்றுலாவை முன்னிறுத்தும் வகையில் 50 புதிய சுற்றுலா தளங்களை உருவாக்க இருப்பதாகவும் திரு அரவிந்த் சிங் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் திரு விஷ்வேந்திர சிங், எஃப்ஐசிசிஐ எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் நிர்வாகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1919173

AD/ES/RS/RR

***



(Release ID: 1919239) Visitor Counter : 128


Read this release in: English , Urdu , Marathi , Hindi