சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவில் வெள்ளைப் புலிக் குட்டிகளை அவற்றிற்கான அறையில் விடுவித்தார் மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ்

Posted On: 20 APR 2023 10:12AM by PIB Chennai

புதுதில்லியில்  உள்ள தேசிய விலங்கியல் பூங்காவில் வெள்ளைப் புலிக் குட்டிகளுக்கான  அறையை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் திறந்து வைத்து, குட்டிகளை கொடியசைத்து விடுவித்தார். அங்கு புதிய வரவாக வந்துள்ள ஒரு பெண் புலிக்குட்டிக்கு அவானி என்றும்,  ஆண் புலிக் குட்டிக்கு வயோம் என்றும் பெயரிட்டார். அவானி என்பதற்கு பூமி என்றும், வயோம் என்பதற்கு உலகம் என்றும் பொருள். இந்த இரண்டு குட்டிகளையும் அதன் தாய் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈன்றது. அவற்றிக்கு தற்போது எட்டு மாதங்கள் பூர்த்தியடைந்துள்ளன.

     

இதைத் தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த பள்ளிக் குழந்தைகளுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை குறித்தும், இயற்கை வளங்களை பாதுகாப்பது பற்றியும் கலந்துரையாடினார்.

     

***

AD/ES/MA/KRS


(Release ID: 1918240)