பாதுகாப்பு அமைச்சகம்
8-வது இந்தியா- தாய்லாந்து பாதுகாப்பு பேச்சுவார்த்தை ஏப்ரல் 20 அன்று பாங்காக்கில் நடைபெறவுள்ளது
प्रविष्टि तिथि:
19 APR 2023 5:38PM by PIB Chennai
தாய்லாந்து அரசின் அழைப்பை ஏற்று பாதுகாப்புத்துறையின் சிறப்பு செயலாளர் திருமதி நிவேதிதா சுக்லா வர்மா 2023 ஏப்ரல் 20,21 தேதிகளில் அரசுமுறைப் பயணமாக பாங்காக் செல்லவிருக்கிறார். இந்தப் பயணத்தின் போது 8-வது இந்தியா- தாய்லாந்து பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்கு ஏப்ரல் 20 அன்று தாய்லாந்தின் பாதுகாப்பு அமைச்சக நிரந்தர துணைச் செயலாளர் ஜெனரல் நுச்சித் ஸ்ரீபன்சாங்குடன் இணைந்து திருமதி நிவேதிதா சுக்லா வர்மா தலைமை தாங்குவார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, இருதரப்பு செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய முயற்சிகளை கண்டறிதல் ஆகியவை இடம்பெறும். இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக திருமதி நிவேதிதா சுக்லா வர்மா, தாய்லாந்தின் பாதுகாப்பு அமைச்சக நிரந்தர செயலாளர் ஜென்ரல் சானிட்சாங் சங்கசந்திராவை சந்தித்துப் பேசுவார்.
***
AP/SMB/AG/KRS
(रिलीज़ आईडी: 1918034)
आगंतुक पटल : 194