சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவின் ஜி-20 சுகாதாரத் திட்ட முன்னுரிமைகளின் பல்வகை அம்சங்கள் குறித்த சிந்தனை அமர்வுகள் 2-வது சுகாதாரப் பணிக்குழுவின் முதல் நாள் கூட்டத்தில் இடம் பெற்றன
Posted On:
17 APR 2023 6:23PM by PIB Chennai
ஜி-20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் 2-வது சுகாதாரப் பணிக்குழுக் கூட்டம் கோவாவின் பனாஜியில் நடைபெறுகிறது. இந்தியாவின் ஜி-20 சுகாதாரத் திட்டத்தின் 3 முன்னுரிமைகளின் பல்வேறு அம்சங்கள் குறித்த சிந்தனை அமர்வுகள் முதல் நாள் கூட்டத்தில் இடம் பெற்றன. இதன் தொடக்க அமர்வில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்தினார். மத்திய சுற்றுலா, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் துறை இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் சிறப்புரையாற்றினார்.
டாக்டர் பாரதி பிரவீன் பவார் பேசுகையில், இந்தியாவின் ஜி-20 முன்னுரிமைகள், 21-ம் நூற்றாண்டின் பல சவால்களை எதிர்கொள்வதற்கு ஏற்றவகையில், பதில் சொல்லும் கடமை உள்ள, அனைவரையும் உள்ளடக்கிய, சமமான, பிரதிநிதித்துவம் கொண்ட பன்முகத்தன்மையில் கவனம் செலுத்துகின்றன என்றார்.
சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் ஊக்கப்படுத்துகின்ற சுற்றுலா தொடர்பான இந்தியாவின் முயற்சிகளை எடுத்துரைத்த திரு ஸ்ரீபத் நாயக், மருத்துவ சுற்றுலாவுக்கு மிகச் சிறந்த இடமாக இந்தியா உள்ளது என்றார். டிஜிட்டல் சுகாதாரப் பிரிவில் அண்மை ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு மற்றும் வெற்றிக் கதைகள் பற்றிய கண்காட்சியை இரு அமைச்சர்களும் தொடங்கிவைத்துப் பார்வையிட்டனர்.
கோவாவின் அகுவாடா கோட்டை வளாகத்தில் நடைபெற்ற விருந்தோம்பல் மற்றும் கோவாவின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் முதல் நாள் கூட்டம் நிறைவடைந்தது.
***
AP/SMB/KPG/KRS
(Release ID: 1917436)
Visitor Counter : 204