கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் கண்ட்லா தீன்தயாள் துறைமுகத்தில் ரூ.123.40 கோடியில் எண்ணெய் தளத்தை அமைக்க திரு சர்பானந்த சோனோவால் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 17 APR 2023 3:49PM by PIB Chennai

குஜராத்தின் கண்ட்லா தீன்தயாள் துறைமுகத்தில் ரூ.123.40 கோடியில் எண்ணெய் தளத்தை அமைக்க மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் ஒப்புதல் அளித்துள்ளார்.  இந்தத் தளம் ரூ.123.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்கேற்புடன் இது உருவாக்கப்படும். 24 மாதத்தில் கட்டுமானத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள திரு சர்பானந்த சோனோவால், நாட்டின் பொருளாதாரத்தில் புதிய திசையை உருவாக்கும் வளம் கண்ட்லா துறைமுகத்துக்கு உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருந்தார்.  அதன்படி,  இந்தத் திட்டம் ஒரு மைல்கல்லாக அமையும். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை இது ஊக்குவிக்கும் என்று கூறினார்.

கண்ட்லா துறைமுகம் 2023 நிதியாண்டில் 137.56 மில்லியன் டன் சரக்கை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 8.23 சதவீதம் அதிகமாகும். கண்ட்லா துறைமுகத்தில் இருந்து   70 சதவீத சரக்குகள் சாலை வழி்யாகவும், 10 சதவீத சரக்குகள் ரயில் வழியாகவும், 20 சதவீதம் குழாய் வழியாகவும் கொண்டுசெல்லப்படுகின்றன. 2030-ம் ஆண்டு வாக்கில் ஆண்டு வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

***

AP/PKV/AG/KRS


(रिलीज़ आईडी: 1917380) आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi