பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

விடுதலையின் அமிர்தப்பெருவிழா 2.0 –ஐ முன்னிட்டு ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 21 வரை தேசிய பஞ்சாயத்து விருதுகள் வாரம் கொண்டாட பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஏற்பாடு

Posted On: 16 APR 2023 12:22PM by PIB Chennai

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு (ஏப்ரல் 24, 2023) விடுதலையின் அமிர்தப்பெருவிழா  2.0 –ன் ஒரு பகுதியாக, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்  ஏப்ரல் 17 முதல் 21 வரை தேசிய பஞ்சாயத்து விருதுகள் வாரத்தை கொண்டாடுகிறது. பஞ்சாயத்துகளின் தீர்மானங்களை நிறைவேற்றும் கொண்டாட்டம்  என்ற தலைப்பில் விருதுகள் வாரத்தின் கருத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஐந்து நாள் தேசிய பஞ்சாயத்து விருதுகள் வாரமானது நாளை புது தில்லியில் 'பஞ்சாயத்துகளை ஊக்குவிக்கும் தேசிய மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா' என்ற நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதனை குடியரசுத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார்.இந்த விழாவில், நாடு முழுவதும் இருந்து 1,500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங், மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல்மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் திரு ஃபக்கன் சிங் குலாஸ்தே ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு சுனில் குமார், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் சந்திர சேகர் குமார் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். மாநில பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்கள், மத்திய அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பஞ்சாயத்து ராஜ் துறையின் மூத்த அதிகாரிகள், பஞ்சாயத்துகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகளும் தேசிய மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.  இதைத் தொடர்ந்து, புதுதில்லியின் பூசாவில் உள்ள சி. சுப்ரமணியம் ஆடிட்டோரியத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேசிய பஞ்சாயத்து விருதுகள்–2023 இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது பெறும் பஞ்சாயத்துகளுக்கு விருதுத் தொகை டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்யப்படும். விருது பெற்ற பஞ்சாயத்துகளின் படைப்புகளில் சிறந்த நடைமுறைகள்' என்ற தலைப்பில் ஒரு சிறு கையேட்டை  மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் வெளியிடுவார்.  கையேட்டின் முதல் பிரதி குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும்.

தேசிய பஞ்சாயத்து விருதுகள் வாரத்தின் தொடக்க விழாவின் போது, மாநில பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்கள், நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் இதுவரை செய்யப்பட்டுள்ள சாதனைகளை அடைவதற்கான உன்னத இலக்கை நோக்கி மாநிலங்களின் கருத்துகள், யோசனைகள், உத்திகள் மற்றும் தயார்நிலையைப் பகிர்ந்து கொள்வார்கள். தேசிய பஞ்சாயத்து விருதுகள் வாரத்தில் நடைபெறும் மாநாடுகளின் தொடர், இந்த நோக்கத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளைப் பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த தளமாக இருக்கும்.

 

பின்னணி:

 

2021 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி விடுதலையின் அமிர்தப்பெருவிழாவின் அதிகாரப்பூர்வ பயணத்தைத் தொடங்கியதில் இருந்து, இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்திற்கான 75 வார கவுண்ட்டவுனைத் தொடங்கியது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் விடுதலையின் அமிர்தப்பெருவிழா பற்றி கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  அதிக அளவில் மக்கள் பங்கேற்புக்கு  முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் புதிய அணுகுமுறையானது புதிய இந்தியாவின் பார்வையை வெளிப்படுத்தும் மற்றும் ஒவ்வொரு இந்தியரிடமும் எதிரொலிக்கும் கருப்பொருள்களில் நீண்ட கால பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதாகும்.

***

AD/PKV/DL(Release ID: 1917095) Visitor Counter : 198