பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு அறிவிப்பு

Posted On: 15 APR 2023 6:27PM by PIB Chennai

உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில்  இருந்து இழப்பீடு வழங்கப்படும் என திரு மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவுகளில் , பிரதமர் கூறியிருப்பதாவது;

"உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் டிராக்டர் டிராலி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது மிகவும் வேதனையானது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்’’.

"ஷாஜஹான்பூரில் நடந்த இந்த துயரத்தைக் கருத்தில் கொண்டு, உள்ளூர் நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன: பிரதமர்"

"உத்தர பிரதேசம் ஷாஜஹான்பூரில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம்  இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர்"

****

AD/PKV/DL


(Release ID: 1916950) Visitor Counter : 147