நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நேர்முக வரிகள் பற்றிய புள்ளி விவரங்கள் வெளியீடு

Posted On: 13 APR 2023 5:06PM by PIB Chennai

நேர்முக வரிகள் வசூலித்தல் மற்றும்  நிர்வாகம் தொடர்பான முக்கிய புள்ளி விவரங்களை மத்திய நேர்முக வரிகள் வாரியம் அவ்வப்போது பொது வெளியில் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, 2013-14 நிதியாண்டில் ரூ.6,38,596 கோடியாக இருந்த நிகர நேர்முக வரிகள் வசூல் 121.18 சதவீதம்  அதிகரித்து  2021-22 நிதியாண்டில் ரூ.14,12,422 கோடியாக இருந்தது.

2013 -14 நிதியாண்டில் ரூ.6,38,596 கோடியாக இருந்த நிகர நேர்முக வரிகள் வசூல் 160.17 சதவீதம்  அதிகரித்து  2022-23 நிதியாண்டில் தோராயமாக ரூ.16,61,428 கோடியாக இருந்தது.

2013 -14 நிதியாண்டில் ரூ.7,21,604 கோடியாக இருந்த மொத்த நேர்முக வரிகள் வசூல் 126.73 சதவீதம்  அதிகரித்து  2021-22 நிதியாண்டில் ரூ.16,36,081 கோடியாக இருந்தது.

2013 -14 நிதியாண்டில் ரூ.7,21,604 கோடியாக இருந்த மொத்த நேர்முக வரிகள் வசூல் 172.83 சதவீதம்  அதிகரித்து 2021-22 நிதியாண்டில் தோராயமாக ரூ.19,68,780 கோடியாக இருந்தது.

2013 -14 நிதியாண்டில் வசூலுக்கான செலவு மொத்த வசூலில் 0.57 சதவீதமாக இருந்த நிலையில், 2021-22 நிதியாண்டில் இது 0.53 சதவீதமாக குறைந்திருந்தது.

இத்தகைய புள்ளி விவரங்கள் பொது வெளியில் அவ்வப்போது வெளியிடப்படுவது கல்வியாளர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், பொருளாதார நிபுணர்களுக்கும், பொதுமக்களுக்கும்  பயனளிக்கிறது.

                                                -----

 

AP/SMB/RS/KPG


(Release ID: 1916324) Visitor Counter : 210


Read this release in: English , Urdu , Marathi , Hindi