இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கேலோ இந்தியா 10 விளையாட்டுக்கள் நிகழ்வில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் தடகள வீரர்கள் பங்கேற்றனர்; மத்தியப் பிரதேசத்தில் அதிகபட்ச எண்ணிக்கையில் பங்கேற்பு
Posted On:
13 APR 2023 3:32PM by PIB Chennai
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கேலோ இந்தியா 10 விளையாட்டுக்கள் நிகழ்வு நாடு முழுவதும் கடந்த மார்ச் 10 முதல் 31 வரை நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் பங்கேற்றனர். இந்த கேலோ இந்தியா 10 விளையாட்டுக்கள் நிகழ்வை ஜேஎல்என் மைதானத்தில் மார்ச் 10 அன்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக்சிங் தாக்கூர் தொடங்கிவைத்தார். அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 30,975 சிறுமிகள், 580 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.
மத்தியப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 17,011 சிறுமிகள் 150 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். இந்த விளையாட்டுக்கள் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் நகரங்கள், மாவட்டங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், கல்லூரிகள், இந்திய விளையாட்டு ஆணைய பிராந்திய மையங்கள், இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையங்கள்,, விரிவாக்க மையங்கள், கேலோ இந்தியா மையங்கள் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன. தேசிய விளையாட்டு கூட்டமைப்பும் இதில் பங்கேற்றது.
ஜம்முவில் ஸ்ரீநகர், கேரளாவில் திருச்சூர், அசாமில் கோக்ரஜார், மகாராஷ்டிராவில் அமராவதி, மத்தியப் பிரதேசத்தில் ஜபல்பூர் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற்றன. கோ-கோ, நீச்சல், தடகளம், வுஷு, வில் வித்தை, கத்தி சண்டை, ஜூடோ, பளு தூக்குதல், ஹாக்கி, யோகாசனம் ஆகிய 10 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த விளையாட்டுகள் சமூக வலைதளம் மூலம் 140 மில்லியன் பேரை சென்றடைந்தது.
***
AP/IR/AG/KPG
(Release ID: 1916252)
Visitor Counter : 177