புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இந்திய சூரிய எரிசக்திக் கழகம் ‘மினிரத்னா வகை- I' என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது
Posted On:
12 APR 2023 4:10PM by PIB Chennai
இந்திய சூரிய எரிசக்திக் கழகம் ‘மினிரத்னா வகை- I' என்ற அந்தஸ்தை 2023, ஏப்ரல் 10 அன்று பெற்றது. இந்தத் தகவலை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி சுமன்ஷர்மா, தொடர்ச்சியான செயல்பாடு, விரைவான, நெகிழ்வான நடைமுறைகள் ஆகியவற்றால் குறுகிய காலத்தில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது என்றார். மாண்புமிகு பிரதமரின் பஞ்சாமிர்த இலக்குகளை எட்டுவதற்கு இந்திய சூரிய எரிசக்திக் கழகம் உறுதிபூண்டுள்ளது என்றும் புதைப் படிம எரிபொருள் இல்லாமல், 2030-க்குள் 500 ஜிகா வாட் மின்னுற்பத்தி திறனை எட்டுவதின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
***
AP/SMB/RS/KPG
(Release ID: 1915927)
Visitor Counter : 249