கலாசாரத்துறை அமைச்சகம்
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கலாச்சார பணிக்குழு நீடித்த எதிர்காலத்திற்கு வாழ்வோடு ஒன்றிய பாரம்பரியத்தை பயன்படுத்துதல் என்ற இரண்டாவது இணையவழிக் கருத்தரங்கிற்கு ஏப்ரல்13 அன்று ஏற்பாடு செய்துள்ளது
Posted On:
12 APR 2023 3:07PM by PIB Chennai
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் கலாச்சார பணிக்குழு, நீடித்த எதிர்காலத்திற்கு வாழ்வோடு ஒன்றிய பாரம்பரியத்தை பயன்படுத்துதல் என்ற இரண்டாவது இணையவழிக் கருத்தரங்கை ஏப்ரல்13 அன்று பிற்பகல் மணி 12.30 முதல் இரவு மணி 8.30 வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதில் ஜி20 நாடுகளின் உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர் நாடுகளின் உறுப்பினர்கள் உட்பட 29 நாடுகளின் நிபுணர்கள், பல்வேறு சர்வதேச அமைப்புகளின் நிபுணர்களும் பங்கேற்க உள்ளனர். இந்தக் கருத்தரங்கத்தின் மூன்று கட்ட பேச்சுகள் இடம் பெற உள்ளன. உணவு மற்றும் வேளாண் அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த இணையவழிக் கருத்தரங்கில் நடத்த உள்ளனர். இது யுனெஸ்கோவின் (பாரிஸ்) யூ டியூப் அலைவரிசையில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.
***
AP/IR/MA/KPG
(Release ID: 1915902)
Visitor Counter : 189