அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

குவாண்டம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பான கடல்சார் தொடர்புகள்: இந்திய கடற்படை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 12 APR 2023 11:53AM by PIB Chennai

குவாண்டம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பான கடல்சார் தொடர்புகளை உருவாக்கும் முயற்சியில் இந்திய கடற்படையுடன் ராமன் ஆராய்ச்சி நிறுவனம் கைகோர்த்துள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் ராமன் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான ஆயுதங்கள் மற்றும் மின்னணு அமைப்புமுறை பொறியியல் நிறுவனத்துடன்  அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. ஐந்து ஆண்டு காலத்திற்கான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் தருண் சௌரதீப் மற்றும் இந்திய கடற்படையின் மெட்டீரியல் தலைவர் துணை அட்மிரல் சந்தீப் நைதானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

பாதுகாப்பான விண்வெளி தொடர்புகளை நோக்கிய நாட்டின் முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் குவாண்டம் தகவல் மற்றும் கணினி ஆய்வகம், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.

 

****

 AD/RB/KPG



(Release ID: 1915868) Visitor Counter : 171