நிதி அமைச்சகம்
கர்நாடகத்தின் வருமான வரித்துறையின் சோதனை நடவடிக்கையில் பறிமுதல்
Posted On:
11 APR 2023 5:44PM by PIB Chennai
கர்நாடக மாநிலத்தின் கடந்த மாதம் 31-ந் தேதி சில கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது. மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் ஏராளமான ஆதாரங்களும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வங்கிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களில் தெரியவந்தது. எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் நடந்த இந்த முறைகேடுகளில் சில கூட்டுறவு சங்கங்களும், சில வணிக நிறுவனங்களும் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு இந்த வணிக நிறுவனங்கள் பயனடையும் வகையில் போலி செலவுகள் செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.15 கோடி அளவுக்கு சில தனியார் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கணக்கில் வராத பணத்தை கடனாக வழங்கியதற்கும் சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சோதனையில் ரூ.3.3 கோடி மதிப்பிலான கணக்கில் வராத ரொக்கப்பணமும், ரூ.2 கோடி மதிப்பிலான கணக்கில் வராத தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனை குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது
***
AD/PKV/AG/KPG
(Release ID: 1915703)
Visitor Counter : 156