நிதி அமைச்சகம்

மத்திய போதைப்பொருள் பிரிவின் ஒருங்கிணைந்த இணையதளம் அறிமுகம்

Posted On: 11 APR 2023 2:26PM by PIB Chennai

மத்திய போதைப்பொருள் பிரிவின் (சிபிஎன்) ஒருங்கிணைந்த இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய்துறை செயலாளர் திரு சஞ்சய் மல்கோத்ரா இந்த தளத்தை தொடங்கிவைத்தார். வருவாய்துறை கூடுதல் செயலாளர் திரு விவேக் அகர்வால், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு ஆணையர் திரு தினேஷ் குமார் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அத்தியாவசிய மருந்துகள் தொடர்பாக தொழில்துறையினருக்கான உரிமம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்ற அங்கீகாரங்களை முறைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை இந்த ஒருங்கிணைந்த இணையதளம் எளிதாக்கும். மத்திய போதைப்பொருள் பிரிவின் இந்த ஒருங்கிணைந்த தளம் மருந்துத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, மருந்து மற்றும் ரசாயனத்துறையின் சேவையைப் பூர்த்தி செய்தல் ஆகிய நோக்கங்களைக்கொண்டு வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும். முதலாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அத்தியாவசிய மயக்க மருந்துகள் கிடைப்பதையும் இது உறுதி செய்யும்.

போதை மருந்துகள் மற்றும் மனநலப் பொருட்கள் சட்டத்திற்கேற்ப அத்தியாவசிய மயக்க மருந்துகள் மனநல மருந்துகள் போன்றவற்றிற்கான இறக்குமதி சான்றிதழ்கள், ஏற்றுமதி அங்கீகாரம் உற்பத்தி உரிமம், அத்தியாவசிய மருந்துகளின் ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பணிகள் தடையற்ற வகையில் நடைபெறுவதை இது உறுதி செய்யும்.

சிபிஎன் எனப்படும் மத்திய போதைப்பொருள் பிரிவு, தேசிய போதை மருந்துகள் மற்றும் மனநலப் பொருட்கள் சட்டம் 1985-ன்படி மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இது மருத்துவ தேவைகளுக்கான அத்தியாவசிய பொருட்கள், மனநல மருத்துவப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

 

***

AD/PLM/RJ/KPG



(Release ID: 1915632) Visitor Counter : 173