வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
இரண்டாவது கட்ட நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் செய்திமடல் வெளியீடு
प्रविष्टि तिथि:
11 APR 2023 11:20AM by PIB Chennai
இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் இரண்டாவது கட்ட நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் செய்திமடலான ‘ஸ்வச் வார்த்தாவின்’ புதிய பதிப்பு, காணொலிக் காட்சி வாயிலாக ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியானது. பெண்கள் சிறப்பு பதிப்பாக வெளிவந்துள்ள இந்த செய்திமடலில் தூய்மை பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதோடு துப்புரவுத் துறையில் பெண்களின் பங்களிப்புக்கு அதிக முக்கியத்துவமும் அளிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் முன்முயற்சிகளை எடுத்துரைக்கும் ஸ்வச் வார்த்தாவின் இரண்டாம் பதிப்பு, பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்கிறது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் கழிவில்லா நகரங்களை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படும் இரண்டாவது கட்ட நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்திற்கு மக்களின் பேராதரவு கிடைத்துள்ளது. தூய்மையான நகர்ப்புற சுற்றுச்சூழலை உருவாக்குவதற்குத் தேவையான வழிமுறைகள் பற்றி எடுத்துரைப்பதற்காக ஸ்வச் வார்த்தா செய்திமடல் அறிமுகப்படுத்தப்பட்டது. தூய்மை இந்தியா இயக்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் முன்முயற்சிகள் குறித்து நாட்டு மக்கள் அனைவரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், கழிவில்லா நகரங்கள் என்ற நிலையை அடைவதும் இந்த செய்திமடலின் இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
*****
(Release ID: 1915492)
(रिलीज़ आईडी: 1915597)
आगंतुक पटल : 227