நிலக்கரி அமைச்சகம்
நிறுவன மற்றும் வர்த்தக நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டாளர்களுடன் கலந்தாய்வு அமர்வை நிலக்கரி அமைச்சகம் நடத்தவுள்ளது
प्रविष्टि तिथि:
10 APR 2023 1:08PM by PIB Chennai
நாட்டின் எரிசக்தி தேவைகளை உறுதி செய்வதற்காக 2023 ஏப்ரல் 12 அன்று புதுதில்லியில் நிறுவன மற்றும் வர்த்தக நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டாளர்களுடன் கலந்தாய்வு அமர்வை நிலக்கரி அமைச்சகம் நடத்தவுள்ளது.
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகப்படுத்துவது, நிலக்கரியின் இறக்குமதி தேவையை குறைப்பது, வணிகத்தை எளிதாக்குவது ஆகியவைபற்றி நிலக்கரித் துறை சார்ந்த அனைத்துத் தரப்பினரிடமிருந்து ஆலோசனைகளை பெறுவதற்கும், பின்னூட்ட கருத்துக்களை கேட்பதற்கும், நிலக்கரித் துறையை மேலும் சிறப்புள்ளதாக மாற்றுவதற்கும், நிலக்கரி அமைச்சகத்தால் அமலாக்கம் செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களின் வெளிப்பாடாக இந்த அமர்வு இருக்கும்.
2022- 23-ம் நிதியாண்டுக்கான நிலக்கரி உற்பத்தி பற்றியும், 2023-24ம் நிதியாண்டுக்கான இலக்குகள் பற்றியும் நிலக்கரி அமைச்சகம் ஆய்வு செய்யும்.
இந்த அமர்வுக்கு நிலக்கரி அமைச்சக செயலாளர் திரு அம்ரித் லால் மீனா தலைமை தாங்குவார். கூடுதல் செயலாளர் திரு எம் நாகராஜும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்.
***
AD/SMB/RS/KPG
(रिलीज़ आईडी: 1915376)
आगंतुक पटल : 165