மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
தொடுதலற்ற பயோமெட்ரிக் முறையை உருவாக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையமும், ஐஐடி பம்பாயும் கைகோர்த்துள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
10 APR 2023 4:17PM by PIB Chennai
எங்கேயும், எப்போதும் மக்களால் எளிதாக பயன்படுத்துவதற்கு ஏற்ப, தொடுதலற்ற பயோமெட்ரிக் முறையை உருவாக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையமும், ஐஐடி பம்பாயும் கைகோர்த்துள்ளன.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ஐஐடி பம்பாய் ஆகியவற்றிற்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நடமாடும் விரல்ரேகைப் பதிவு முறையைக் கட்டமைக்க கூட்டாக ஆராய்ச்சி நடத்தப்பட உள்ளது.
தொடுதலற்ற பயோமெட்ரிக் பதிவு முறை உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்போது, முகத்தின் மூலம் அடையாளம் என்பது போல், வீட்டில் இருந்தே கைரேகை அடையாளம் அனுமதிக்கப்படும். இந்த புதிய முறை ஒரே நேரத்தில் பல கைரேகைகளை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
***
AD/SMB/RS/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1915373)
வருகையாளர் எண்ணிக்கை : 572