ஆயுஷ்
azadi ka amrit mahotsav g20-india-2023

உலக ஹோமியோபதி தினத்தில் அறிவியல் மாநாட்டை ஏற்பாடு செய்ய ஆயுஷ் அமைச்சகம்

Posted On: 08 APR 2023 2:03PM by PIB Chennai

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில், 2023 ஏப்ரல் 10-ம் தேதியன்று உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு புது தில்லியில் அறிவியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. குடியரசு துணைத்தலைவர் திரு.ஜக்தீப் தன்கர் அறிவியல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு.சர்பானந்த சோனோவால் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

ஹோமியோபதியின் நிறுவனர் டாக்டர் கிறிஸ்டியன் ஃபிரெட்ரிச் சாமுவேல் ஹானிமன் அவர்களின் 268வது பிறந்தநாளைக் நினைவுகூரும் வகையில் உலக ஹோமியோபதி தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் ஹோமியோபதி ஆராய்ச்சியாளர்கள், பல துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மாணவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு ஹோமியோபதி சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஹோமியோபதியில் முன்னேற்றம், ஆராய்ச்சி சான்றுகள் மற்றும் ஹோமியோபதி மருத்துவ அனுபவங்கள் குறித்த பல்வேறு அமர்வுகள் இந்த மாநாட்டில் நடத்தப்படும்.

விக்யான் பவனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்தியாவில் ஐந்து இடங்களில் மண்டல உலக ஹோமியோபதி தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

***

CR/SM/DL(Release ID: 1914869) Visitor Counter : 129