குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சுவாமி தயானந்த சரஸ்வதியின் தொலைநோக்கு பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் புதிய கல்விக் கொள்கையில் எதிரொலிக்கிறது - குடியரசுத் துணைத் தலைவர்

Posted On: 07 APR 2023 3:26PM by PIB Chennai

சுவாமி தயானந்த சரஸ்வதியின் தொலைநோக்குப் பார்வையும் சமூகத் தீமைகளை எதிர்த்துப் போராடும் நடவடிக்கையும் இன்றுவரை தொடர்கிறது, மேலும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் புதிய கல்விக் கொள்கையில் எதிரொலிக்கிறது  என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார். புதுதில்லியில் இன்று சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட அவர், தீண்டாமை போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பதற்கும், சுதந்திர இந்தியாவில் சமூக நலனுக்கான அடித்தளத்தை உருவாக்கும் கல்வியின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் சுவாமி தயானந்தர் மேற்கொண்ட அர்ப்பணிப்பு முயற்சிகளை அவர் குறிப்பிட்டார்.

நவீன இந்தியாவின் சிந்தனையாளர்-தத்துவவாதியாகவும், ஆர்ய சமாஜத்தின் நிறுவனராகவும் சுவாமி தயானந்தின் பங்களிப்புகளை குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார். காலனித்துவ ஆட்சியின் போது, இந்தியா தனது ஆன்மீக மற்றும் கலாச்சார நெறிகளை இழந்தபோது, சுவாமி தயானந்த சரஸ்வதி இந்தியாவின் நாகரீக நெறிமுறைகள் புத்துயிர் பெற ஒரு பகுத்தறிவு கண்ணோட்டத்துடன் வேத ஞானத்தை மீண்டும் புகுத்தினார், என்றார்.

சுதந்திரத்துக்கான தெளிவான அழைப்பை முதலில் வழங்கியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி என்று திரு தன்கர் நினைவு கூர்ந்தார். இது லோகமான்ய திலகரால்  பெருக்கப்பட்டு மக்கள் இயக்கமாக மாறியது என்று அவர் கூறினார்.

சமஸ்கிருதம் மற்றும் இந்தி போன்ற மொழிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்வதில் சுவாமி தயானந்தரின்  பங்களிப்பை திரு தன்கர் சுட்டிக்காட்டினார்.  “சமஸ்கிருதத்தில் இருக்கும் ஆழம் கொண்ட இலக்கணம் எந்த மொழியிலும்  இல்லை,  இது அனைத்து மொழிகளுக்கும் தாய் போன்றது," என்று குறிப்பிட்ட அவர், குடிமக்கள் தங்கள் வேர்களை ஒருபோதும் மறக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

 

-----

VJ/PKV/KPG



(Release ID: 1914695) Visitor Counter : 152