வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் கீழ் இணைப்புகள் திட்டமிடல் குழு (NPG) அதன் 46வது அமர்வில் 4 உள்கட்டமைப்பு திட்டங்களை பரிந்துரைக்கிறது

Posted On: 07 APR 2023 11:24AM by PIB Chennai

பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் கீழ் உள்ள இணைப்புகள் திட்டமிடல் குழு (NPG) அதன் 46வது அமர்வில் 4 உள்கட்டமைப்பு திட்டங்களை ஆய்வு செய்து பரிந்துரைத்தது. டிபிஐஐடியின் திட்ட செயல்படுத்தல் பிரிவு சிறப்புச் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொலைத்தொடர்புத் துறை (DOT), சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்கள்/துறை உறுப்பினர்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இரயில்வே, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள், சிவில் விமான போக்குவரத்து, ஆற்றல், நித்தி ஆயோக், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்,  பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது ரயில்வேயின் 4 திட்டங்கள் இணைப்புகள் திட்டமிடல் குழுவால்(NPG) ஆய்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான அணுகுமுறையைப் பயன்படுத்தி இந்த திட்டங்கள் பிரதமரின் விரைவு சக்தி கொள்கைகளுடன் இணைந்து உருவாக்கப்படும். இந்தத் திட்டங்கள் பன்முக இணைப்பு, சரக்குகள் மற்றும் பயணிகளின் தடையற்ற இயக்கம் மற்றும் நாடு முழுவதும் திட்ட  செயல்திறனை அதிகரிக்கும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மாதோபூர் மற்றும் ஜெய்ப்பூர் இடையே அகலப்பாதை இரட்டை பாதை அமைப்பதற்கான ரயில்வே அமைச்சகத்தின் திட்டம் இணைப்புகள் திட்டமிடல் குழுவால் (NPG) ஆய்வு செய்யப்பட்டது. இந்த திட்டம் சவாய் மாதோபூரில் இருந்து ஜெய்ப்பூர் வரை சுமார் 131 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளது.  இது ஒரு குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு முயற்சியாக இருக்கும். இத்திட்டம் முடிவடைந்ததும், 2026-27ஆண்டுக்குள் பாதை திறனை 71% (பராமரிப்புத் தொகுதி இல்லாமல்) மற்றும் 80% (பராமரிப்புத் தொகுதியுடன்) மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ப்பூர்-சவாய் மாதோபூர் பாதை டெல்லி-மும்பை வழித்தடத்திற்கு ஊட்டமாக செயல்படுகிறது. மேலும் இது ஜெய்ப்பூர் அதன் சுற்றுப்புறங்கள் மற்றும் மும்பை இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் முதன்மை வழித்தடமாக உள்ளது. முன்மொழியப்பட்ட திட்டம், தற்போதுள்ள ஒற்றை பாதையில் இணைப்பில்   உள்ள நெரிசலைக் குறைக்க உதவும். இதன் விளைவாக தடையற்ற போக்குவரத்து ஏற்படும்.

மேலும், தேசிய திட்டமிடல் குழு (NPG) உத்தரபிரதேச மாநிலத்தில் வடகிழக்கு இரயில்வேயில் மஹராஜ்கஞ்ச் வழியாக ஆனந்த் நகர் குகுலி இடையே புதிய அகலப்பாதை அமைப்பதற்காக ரயில்வே அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட திட்டத்தை மதிப்பீடு செய்துள்ளது. முன்மொழியப்பட்ட திட்டம் ஆனந்த் நகரில் இருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவில் அகலப் பாதையாக (பிஜி) கட்டப்படும். இத்திட்டம் நேரடியாக அகலப் பாதையை வழங்குவதன் மூலம் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய பாதையானது கோரக்பூர் சந்திப்பில் நிற்காமல் வால்மீகிநகரில் இருந்து மஹராஜ்கஞ்ச் வழியாக கோண்டாவிற்கு செல்லும் ரயில்களுக்கு மாற்றாக இருப்பதோடு  பயண தூரத்தையும் குறைக்கும். இந்தப் பகுதியில் தற்போது உள்ள ஒரே போக்குவரத்து சாலை வழியாக மட்டுமே இருப்பதால் பயணிகள் இந்தப் புதிய ரயில் பாதையால் பயனடைவார்கள். கூடுதலாக, ரயில் பாதையானது சிமென்ட், உரம், நிலக்கரி மற்றும் உணவு தானியங்களை எடுத்துச் செல்வதையும் எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொடர்புடைய தொழில்களுக்கு நன்மைகள் கிடைக்கும். மேலும், ரயில் பாதை நேபாளத்திற்கு சரக்கு போக்குவரத்துக்கும் உதவும்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜுனகர் முதல் நபரங்பூர் ரயில் நிலையம் வரை புதிய அகலப்பாதை அமைக்க ரயில்வே அமைச்சகத்தின் மற்றொரு திட்டம் இணைப்புகள் திட்டமிடல் குழுவால்(NPG) ஆய்வு செய்யப்பட்டது. முன்மொழியப்பட்ட திட்டம் ஜுனாகரிலிருந்து நபரங்பூர் வரை சுமார் 116 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளது. இந்தப் புதிய பாதையின் கட்டுமானமானது பைலடேலா இரும்புத் தாது சுரங்கங்களிலிருந்து ராய்ப்பூர் பகுதியில் உள்ள பல்வேறு எஃகு ஆலைகளுக்கான தூரத்தை 131 கிலோமீட்டர்கள் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஃகு ஆலையின் போக்குவரத்தை எளிதாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஜுனகர் சாலை, ஜெய்ப்பூர், கோராபுட் மற்றும் ரயில் பாதையில் உள்ள மற்ற சரக்குக் கொட்டகைகள் இவை பல மாதிரி போக்குவரத்துக்கான புள்ளிகளாகும். இந்த புதிய பாதை விசாகப்பட்டினம், கங்காவரம் மற்றும் காக்கிநாடா துறைமுகங்களில் இருந்து ராய்ப்பூர் பகுதியில் உள்ள பல்வேறு எஃகு ஆலைகளுக்கு நிலக்கரி கொண்டு செல்ல மாற்று வழியை வழங்கும். சாலை-ரயில் இடைப்பட்ட தளவாடங்களை வழங்குவது ஜெய்பூர், ஜுனகர் சாலை மற்றும் நபரங்பூர் ஆகிய இடங்களில் உள்ள சரக்குக் கொட்டகைகளுக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வே அமைச்சகத்தின் கடைசி திட்டமானது மேற்கு ரயில்வேயில் அதிக அளவிலான பயன்பாட்டு நெட்வொர்க்கில் தானியங்கி பிளாக் சிக்னலிங் சரக்குகளை வழங்குவதாகும். இந்த திட்டம் 895 RKM மற்றும் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மேற்கு இரயில்வேயின் நான்கு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியதாக உள்ளது. மேற்கு ரயில்வேயின் உயர் அடர்த்தி நெட்வொர்க் (HDN) வழித்தடங்களில் ஏபிஎஸ் ஏற்கனவே உள்ளது என்பதால் இந்த திட்டம் சமநிலை சரக்கு அடர்த்தியான உயர் பயன்பாட்டு இணைப்பு (HUN) வழிகளை ஏபி எஸ்  (ABS)இன் கீழ் கொண்டு வரும். திட்டத்தின் பலன், மேம்படுத்தப்பட்ட லைன் கொள்ளளவு மற்றும் பிரிவு வேகம் மணிக்கு 110 கிலோமீட்டரிலிருந்து  130 கிலோமீட்டராக இருக்கும்.  இது ரயில்வேக்கான செலவுக் குறைப்புக்கு வழிவகுக்கும். ஒட்டுமொத்த போக்குவரத்து செயல்திறனை அதிகரிக்கும். இதனால் குறிப்பாக உத்னா - ஜல்கான், அகமதாபாத் - பலன்பூர், அகமதாபாத்- விரம்கம்- சமக்கியாலி, மற்றும் விராம்கம்- ராஜ்கோட் பிரிவுகளில் ரயில் தடுப்பு மற்றும் பயண நேரம் குறைக்கப்படும்.  சாலை போக்குவரத்து நெரிசல் மற்றும் கார்பன் தடம் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கம் ஆகியவை இத்திட்டத்தால் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் ஆகும்.

-----

VJ/JL/KPG



(Release ID: 1914651) Visitor Counter : 136