இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் சான்றிதழ்களை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டிஜிலாக்கரில் பதிவேற்றியது
Posted On:
06 APR 2023 5:46PM by PIB Chennai
முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் சான்றிதழ்களை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டிஜிலாக்கரில் பதிவேற்றியிருப்பதன் மூலம் தடகள வீரர்கள், உதவியாளர்கள், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் குழுவினரின் தலைவர், விளையாட்டுப் போட்டி மேலாளர் போன்றவர்கள் டிஜிட்டல் தளம் மூலம் கேலோ இந்தியா சான்றிதழ்களை எளிதாக பெற முடியும்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கேலோ இந்திய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் கலந்துகொண்டவர்களும், வெற்றி பெற்றவர்களும், வெற்றியாளர்களும் உரிய சான்றிதழ்களை எளிதாக பெற முடியும்.
டிஜிட்டல் லாக்கர் என்பது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னோடித் திட்டமாகும். டிஜிலாக்கர் அசல் ஆவணங்களின் பாதுகாப்பான டிஜிட்டல் பதிவை கிளவுட்டில் வைத்திருக்க உதவுகிறது மற்றும் பயனரின் வேண்டுகோளின்படி, பல்வேறு அங்கீகாரங்களுக்கும் அவற்றை பயன்படுத்த முடியும்.
***
AP/GS/RJ/KPG
(Release ID: 1914404)
Visitor Counter : 166