விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

அரசு வழியில் மட்டுமே செயற்கைக்கோள்கள் உருவாக்கம் மற்றும் அதனை ஏவுவதற்கான நடவடிக்கைகளுக்கு விண்வெளித்துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு 100 சதவீதம் தற்போது அனுமதிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 06 APR 2023 3:06PM by PIB Chennai

அரசு வழியில் மட்டுமே செயற்கைக்கோள்கள் உருவாக்கம் மற்றும் அதனை ஏவுவதற்கான நடவடிக்கைகளுக்கு விண்வெளித்துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு 100 சதவீதம் தற்போது அனுமதிக்கப்படுவதாக மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை   இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

இது குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங், மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்திய தேசிய விண்வெளி மேம்பாட்டு அங்கீகார மையம் (இன் ஸ்பேஸ்) ஒழுங்குப்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.  மாற்றியமைக்கப்பட்ட நேரடி அந்நிய கொள்கையில் விண்வெளி நடவடிக்கைகள் குறித்த பரிசீலனையை அரசு தற்போது மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

 

***

AD/IR/AG/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1914294) வருகையாளர் எண்ணிக்கை : 237
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Telugu