சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு


பணவீக்கத்திற்கு எதிரான நடவடிக்கை தொடரும்: ரிசர்வ் வங்கி ஆளுநர்

Posted On: 06 APR 2023 11:41AM by PIB Chennai

இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நிதிக் கொள்கை ரிசர்வ் வங்கியின் யூடியூப் அலைவரிசையில் இன்று வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு சக்தி காந்ததாஸ் ரெப்போ வட்டி விகிதத்தில்  மாற்றம் செய்யாமல் தொடர்ந்து 6.50 சதவீதத்திலேயே  நீடிக்க நிதிக் கொள்கை குழு முடிவு செய்துள்ளதாக கூறினார். வங்கி இருப்பு விகிதம் 6.75 சதவீதமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  வங்கிகளிலிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும் அவர் கூறினார்.  நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  பணவீக்கம் 5.2 சதவீதமாக இருக்கும் என்று  குறிப்பிட்டார். மேலும் பணவீக்கத்திற்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று அவர் கூறினார்.

வங்கிகளில் உரிமைக்கோரப்படாத பணம் குறித்த தகவல்களை மக்கள் அறிந்து கொள்வதற்காக பல்வேறு வங்கிகளில் இணைய தளம் தொடங்கப்படும் என்று திரு சக்தி காந்ததாஸ் அறிவித்தார்.

 

***

AD/IR/AG/KPG


(Release ID: 1914229) Visitor Counter : 152


Read this release in: English , Urdu , Hindi , Marathi , Odia