பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச பேரிடர் மீட்பு உள்கட்டமைப்பு 2023 மாநாட்டில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 04 APR 2023 7:49PM by PIB Chennai

5-வது சர்வதேச பேரிடர் மீட்பு உள்கட்டமைப்பு  2023 மாநாட்டில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் மத்திய அமைச்சர்கள், ஐநா சபையின் பொது செயலாளருக்கான சிறப்பு பிரதிநிதி திருமிகு மாமி மிசுடோரி,பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!

கடந்த 5 வருட காலகட்டமாக பேரிடர் மீட்பு குறித்து பல்வேறு அமைப்புகள் ஆக்கப்பூர்வமான கருத்துகளை பரிமாறிக்கொண்டு வருகின்றன.

சர்வதேச மற்றும் தேசிய மேம்பாட்டு நடவடிக்கைகளில் பேரிடர் மீட்பு ஒரு முக்கிய அங்கமாக மாறி வருகிறது. இந்த பிரச்சனைக் குறித்து தற்போது மேம்பட்ட அளவில் பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உள்கட்டமைப்பு சேவை வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகிறது. சமூக, பொருளாதார மற்றும் இயற்கை வழியிலான முறைகள் போன்றவைகள் அதிவேகமாக மாறிவரும் இந்த சூழ்நிலையில் மேற்கூறப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது.

20-ம் நூற்றாண்டின் அமைப்பு ரீதியிலான அணுகுமுறைகள் 21-ம் நூற்றாண்டின் பிரச்சனைகளுக்கு எதிர்பார்க்கப்படும் தீர்வுகளை ஏற்படுத்தாது. மத்திய தரைவழி, ரயில்வே, விமானம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சகங்களை ஒன்றினைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. கடின உழைப்பின்றி நீண்டகால தீர்வுகள் ஏற்படாது. அமைப்பு ரீதியிலான புத்தாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நமது உள்கட்டமைப்பு சேவைகளில் எது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கவனத்துடன் சிந்திக்க வேண்டும். பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்த சூழ்நிலைகளில் வளர்ந்து வரும் புதிய நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு எதிர்வினையாற்ற வேண்டும்.  எதிர்காலம் உறுதியற்றதாக இருக்கும் போது நாம் மேற்கொள்ளும் ஒருவழி நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க இயலாது.

நமது அமைப்புகளை நவீனப்படுத்துவதில் சில பின்னடைவுகள் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு துறைசார்ந்த வல்லுநர்களின் சேவை அவசியமாகிறது. நமது சமூக, பொருளாதார அமைப்பை உணர்ந்த பொறியாளர்கள் தேவை. வடக்கு-தெற்கு, தெற்கு-தெற்கு, வடக்கு-வடக்கு முறையில் பரிமாற்றங்கள் நடைபெறுவதை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக தெற்கில் உள்கட்டமைப்பு சேவைகள் கிடைப்பதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

மக்களுக்கு நம்பிக்கை தரும் அளவிலான உள்கட்டமைப்பு சேவைகளை முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த வாரம் ஜி20 உறுப்பு நாடுகள் பேரிடர் மூலம் ஏற்படக்கூடிய விளைவுகளை குறைப்பது தொடர்பாக முதல் விவாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 2 மாதத்திற்குள்  உயர்மட்ட அரசியல் அமைப்பின் கூட்டத்தை நடத்த ஐநா முடிவு செய்துள்ளது.  அந்தக் கூட்டத்தில் சென்டாய் கட்டமைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்படும். இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். நாம் இதனை பயன்படுத்திக்கொள்வோம்.

நன்றி!

*****

AP/GS/RJ/KPG

 


(Release ID: 1913925) Visitor Counter : 171