புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
2030-ம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் உற்பத்தி என்ற இலக்கை அடைவதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் வருடத்திற்கு மேலும் 50 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது
Posted On:
05 APR 2023 12:59PM by PIB Chennai
2030-ம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் உற்பத்தி என்ற இலக்கை அடைவதற்கு 2023-24 நிதி ஆண்டில் இருந்து 2027-28-ம் நிதி ஆண்டு வரை அடுத்த ஐந்து ஆண்டுகளில் வருடத்திற்கு மேலும் 50 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. 2030-ம் ஆண்டிற்குள் புதைபடிவமற்ற எரிசக்தியில் இருந்து 500ஜிகாவாட் உற்பத்தி என்ற இலக்கை அடைய வேண்டும் என்று பருவநிலை மாநாட்டில் உரையாற்றிய பிரதமரின் அறிவிப்பின் படி கடந்த வாரம் மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இந்த திட்டத்தை இறுதி செய்தது.
28 பிப்ரவரி 2023-ன் படி இந்தியாவின் தற்போதைய மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 168.96 ஜிகாவாட் ஆகும். இதில் சூரிய மின்சக்தி 64.38 ஜிகாவாட், நீர்மின்சக்தி 51.73 ஜிகாவாட், காற்றாலை மின்சக்தி 42.02 ஜிகாவாட், உயிரி மின்சக்தி 10.77 ஜிகாவாட்.
***
AP/IR/AG/KPG
(Release ID: 1913909)
Visitor Counter : 307