எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (NMDC) தொடர்ந்து இரண்டாவது நிதியாண்டில் 41 மில்லியன் டன்னுக்கும் அதிகமாக உற்பத்தி செய்துள்ளது


4ஆம் காலாண்டு மற்றும் மார்ச் மாதம் இரும்புத் தாது உற்பத்தி மிகச் சிறப்பாக பதிவாகியுள்ளது

Posted On: 04 APR 2023 1:41PM by PIB Chennai

இந்தியாவின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளரான தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (NMDC,) தொடர்ந்து இரண்டாவது நிதியாண்டில் 41 மில்லியன் டன்னுக்கும் அதிகமாக இரும்புத் தாது உற்பத்தியைக் செய்துள்ளது. நான்காவது காலாண்டில் 14.29 மில்லியன் டன்னும், 2022-23 நிதியாண்டின் மார்ச் மாதத்தில் 5.6 மில்லியன் டன்னும் இரும்புத் தாதுவை உற்பத்தி செய்து தனது நான்காவது காலாண்டு  மற்றும் மார்ச் மாத உற்பத்தியை நிறுவன வரலாற்றில் மிகச் சிறந்ததாக பதிவு செய்துள்ளது.

2022-23 நிதியாண்டில், தேசிய கனிம வளர்ச்சிக் கழகம்(NMDC) 41.22 மில்லியன் டன்களை உற்பத்தி செய்து 38.25 மில்லியன் டன் இரும்புத் தாதுவை விற்பனை செய்துள்ளது. இந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனம் 14.29 மெட்ரிக் டன் உற்பத்தியைப் பதிவுசெய்துள்ளது. இது தொடக்கத்தில் இருந்து எந்த காலாண்டிலும் இல்லாத  அதிகபட்ச அளவாகும்.

பனிமூட்டமான காலநிலையைத் தணிக்க பார்வை மேம்பாடு தொழில்நுட்பம், நெரிசலைத் தவிர்க்க சிறப்பு சுரங்க லைனர்கள் மற்றும் தாதுக்களில் ஈரப்பதத்தைக் குறைக்க தண்ணீரை உறிஞ்சும் பாலிமர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பருவமழை பாதிப்புகளை சமாளித்து தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (NMDC) இந்த உற்பத்தி மைல்கல்லை எட்டியது. சுரங்கம் தனது உற்பத்தித் திறனை மேலும் அதிகரிப்பதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு 2022-23 நிதியாண்டில் அதன் வெளியேற்றும் திறனையும் மேம்படுத்தியுள்ளது.

வலுவான இந்த செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த திரு அமிதவ முகர்ஜி (சிஎம்டி, கூடுதல் பொறுப்பு) "முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்தாலும் 41 மெட்ரிக் டன் இரும்புத் தாது உற்பத்தியைத் தாண்டியது தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தின்  வலிமை, மீள்தன்மை மற்றும் கனிமப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. நிதியாண்டு 2023 இல் உற்பத்தி, தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தின் (NMDC )நிதியாண்டு 2023-24 இல் சரியான வேகத்துடன் நுழைகிறது." என்று தெரிவித்துள்ளார்.

 

------

AP/JL/KPG


(Release ID: 1913578) Visitor Counter : 158