வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தூய்மை இந்தியா இயக்கத்திற்கான (நகர்ப்புறம்) 2.0 பெரு நிறுவன சமூகப் பொறுப்பு
Posted On:
03 APR 2023 12:42PM by PIB Chennai
நகரப்புறத் தூய்மை இந்தியா இயக்கம் கடந்த 2022 அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் நகரப்புறங்களில் திறந்தவெளி மலம்கழித்தல் இல்லாத சூழலை உருவாக்குவதும், ஒட்டுமொத்த நகராட்சித் திடக் கழிவுகளை தொழில்நுட்ப முறையில் பராமரித்தல் ஆகியவையே இந்த இயக்கத்தின் முக்கியப் பணிகளாகும். இந்த இயக்கத்தின் பணிகள் திறன்பட அமைந்ததைத் தொடர்ந்து, நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் 2-ம் கட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, தனிநபர் வீடுகளில் கழிப்பறை அமைத்தல், பொதுக் கழிப்பறைகள், சமூகக் கழிப்பறைகளை அமைத்தல், பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்தல், திடக்கழிவு மேலாண்மை, திறன் மேம்பாடு, தகவல், கல்வி, தொலைத்தொடர்பு ஆகியவற்றின் மூலம், நாட்டைக் கட்டி எழுப்புவதில் மாற்றத்தை உருவாக்குவதற்கான முயற்சியை மேற்கொள்ள ஏதுவாக மத்திய அரசின் நிதி பங்களிப்பு விடுவிக்கப்பட்டது.
நகர்ப்புறத் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கிய 2014ம் ஆண்டு இந்த இயக்கத்தின் கீழ் மொத்தம் 62.81 லட்சம் தனிநபர் வீடுகளில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டதுடன், 6.36 லட்சம் சமூக மற்றும் பொதுக் கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 92,634 வார்டுகளில் 89,699 வார்டுகளில் 100 சதவீத இல்லந்தோறும் கழிவுகளை பெரும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் 83, 487 வார்டுகளில் 100 சதவீதம் கழிவுகள் தரம்பிரிக்கப்படுகின்றன. தற்போது வரை, 75 சதவீத கழிவுகள் பதப்படுத்தப்படுகின்றன.
இதனைத்தொடர்ந்து அம்ருத், அம்ருத் 2.0 இயக்கங்கள் கடந்த 2021 அக்டோர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் நகரப்புற பகுதிகளில் வசிப்போரின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொள்வதே இந்த இயக்கத்தின் முக்கியப் பணிகளாகும். இதுவரை மாநில அரசின் பங்களிப்புடன் ரூ.1,29,636 கோடி மதிப்பிலான 6,527 திட்டங்களை உள்ளடக்கிய பணிகளுக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகரப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இதில் ரூ.87,896 கோடி மதிப்பிலான குடிநீர் விநியோகத் திட்டங்களும், ரூ.37,636 மதிப்பிலான 447 கழிவு மேலாண்மைத் திட்டங்களும் ரூ.439 கோடி மதிப்பிலான 982 பூங்காக்கள் / பசுமை இல்ல மேம்பாட்டுத்திட்டங்களும் அடங்கும். அனுமதியளிக்கப்பட்டத் திட்டங்களில் ரூ.103 99 கோடி மதிப்பிலான 20 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல், ரூ.5634,55 கோடி மதிப்பிலான 633 திட்டங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நகர்ப்புறம் தூய்மை இந்தியா 2.0, அம்ரூத் 2.0 இயக்கத்தின் ரூ.1,41,600 கோடி மதிப்பிலானத் திட்டங்களில் ரூ. 2,77,000 கோடி மத்திய அரசின் பங்களிப்பாகும். எஞ்சிய தொகை மாநில அரசுகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் பங்களிப்புடனும், பொது மற்றும் தனியார் பங்களிப்புடனும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்விரு இயக்கங்களின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) விபரங்கள் எதுவும் இல்லை.
இவ்விரு இயக்கங்களுக்கு மத்திய அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை பயன்படுத்துவது மற்றும் கண்காணிப்பதற்கு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி முதல் புதிய நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வீட்டு வசதி நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு கவுஷல் கிஷோர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள தகவலில் இதனை தெரிவித்துள்ளார்.
***
AP/ES/RS/RR
(Release ID: 1913288)
Visitor Counter : 200