எரிசக்தி அமைச்சகம்

இரண்டாவது ஜி20 எரிசக்தி மாற்றங்களுக்கான பணிக்குழு கூட்டம் காந்திநகரில் தொடங்கியது

Posted On: 02 APR 2023 6:35PM by PIB Chennai

புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றின் உடனடி மற்றும் அழுத்தமான சவால்களை கூட்டாக எதிர்கொள்வதை ஜி20 இந்தியாவின் தலைமை நோக்கமாகக் கொண்டுள்ளது - டாக்டர் முன்ஜ்பரா மகேந்திரபாய் கலுபாய்

 

தூய்மையான எரிசக்தி மாற்றத்தை அடைய ஜி20 உறுப்பு நாடுகள் ஒத்துழைத்து நம்பக உணர்வை உருவாக்க வேண்டும்: ஸ்ரீ அலோக் குமார், மின்துறை செயலர்

 

ஜி20 இந்தியாவின் தலைமையின் கீழ் 2வது எரிசக்தி மாற்றங்களுக்கான பணிக்குழு (ETWG) கூட்டம் காந்திநகரில் இன்று தொடங்கியது. ஆயுஷ் துறை  பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான மத்திய இணை அமைச்சர் டாக்டர். முன்ஜ்பரா மகேந்திரபாய் கலுபாய் தனது தொடக்க உரையில் புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்கு உடனடி மற்றும் அழுத்தமான தீர்வுகளைக் கண்டறிவதில்  ஜி20 இந்தியாவின் தலைமைத்துவம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். தூய்மையான ஆற்றலை ஊக்குவித்து, செலவு குறைந்ததாகவும் நம்பகத்தன்மையுடையதாகவும் மாற்ற புதுமையான தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியின் அவசியத்தை அமைச்சர் எடுத்துரைத்தார்.

 

ஜி20 உறுப்பு நாடுகள், சிறப்பு அழைப்பாளர் நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA), ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UNESCAP), ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியாவிற்கான ஐரோப்பிய ஆராய்ச்சி நிறுவனம் (ERIA), பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC), மற்றும் சர்வதேச சோலார் கூட்டணி (ISA), ஆகியவை இந்த விவாதக் கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.

தொடக்க நிகழ்வின் போது ​​பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய 'வாழ்க்கை பிரச்சாரம்' அல்லது 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை'யின் முக்கியத்துவம் குறித்து மத்திய இணை அமைச்சர் குறிப்பிட்டார். தனிநபர்கள் மற்றும் சமூகங்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும்  வளங்களை கவனத்துடன் பயன்படுத்துவதற்கான ஒரு வெகுஜன இயக்கமாக உலக நாடுகளை இயக்கி கட்டமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

மின்துறை அமைச்சக செயலாளர் திரு. அலோக் குமார், ஜி20 உறுப்பினர்களிடையே சமமான, பகிரப்பட்ட மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்க கூட்டு நடவடிக்கையை அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தூய்மையான ஆற்றல் மாற்றத்தை அடைய உறுப்பு நாடுகளை ஒத்துழைக்கவும், நம்பக உணர்வை உருவாக்கவும் அவர் வலியுறுத்தினார். சுத்தமான ஆற்றல் மாற்றம். வள மையங்கள், மிஷ்டி, அம்ரித் தரோஹர், கரையோர கப்பல் போக்குவரத்து மற்றும் அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார்.

பசுமை ஹைட்ரஜன் மிஷன், ஆற்றல் மாற்றம், ஆற்றல் சேமிப்பு திட்டங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கரியமிலவாயு வெளியேற்றம், பசுமைக் கடன் திட்டம்,

கோபர்தன் திட்டம், வாகன மாற்று என பல வழிகளில் இந்தியா இதற்கான முன்னெடுப்புகளை செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

 

தொழில்நுட்ப இடைவெளிகளை நிவர்த்தி செய்வதன் மூலம் ஆற்றல் மாற்றம், ஆற்றல் மாற்றத்திற்கான குறைந்த செலவில் நிதியளித்தல், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பல்வகைப்பட்ட விநியோகச் சங்கிலிகள், ஆற்றல் திறன், தொழில்துறை குறைந்த கார்பன் மாற்றங்கள் மற்றும் பொறுப்பான நுகர்வு, எதிர்காலத்திற்கான எரிபொருள்கள் உள்ளிட்ட ஆறு முன்னுரிமைப் பகுதிகள் கூட்டத்தில் கவனம் பெறுகின்றன. சுத்தமான எரிசக்திக்கான உலகளாவிய அணுகல் மற்றும் நியாயமான, மலிவு மற்றும் உள்ளடக்கிய ஆற்றல் மாற்றம் பாதைகள் ஆகியவை விவாதிக்கப்படுகின்றன. கூட்டத்தின் பக்க நிகழ்வாக குளோபல் கிரீன் ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பு - நிகர பூஜ்ஜிய பாதைகளை செயல்படுத்துதல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இரண்டாவது எரிசக்தி மாற்றங்களுக்கான பணிக்குழு (ETWG) கூட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதிநிதிகள் காந்திநகரில் உள்ள கிஃப்ட் சிட்டியையும் பார்வையிட்டனர்.

 

இந்தியாவின் தலைமையின் கீழ், நான்கு எரிசக்தி மாற்றங்களுக்கான பணிக்குழு(ETWG) கூட்டங்கள், பல்வேறு பக்க நிகழ்வுகள் மற்றும் ஒரு அமைச்சகக் கூட்டம் ஆகியவை தூய்மையான எரிசக்தி மாற்றத்தில் உலகளாவிய ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கும், நிலையான பொருளாதார வளர்ச்சியின் மையமாக மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

**********

AD/CJL/DL



(Release ID: 1913128) Visitor Counter : 171