பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

முதல்முறை வாக்காளர்கள் மோடி காலத்தின் குழந்தைகள் அதுவே அவர்களின் மிகப்பெரிய ஆசீர்வாதமும் நன்மையும் ஆகும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்

Posted On: 02 APR 2023 4:45PM by PIB Chennai

உத்தரபிரதேசத்தில் உள்ள ஹசன்பூர் சட்டமன்ற தொகுதியில் முதல்முறை வாக்காளர்கள் கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றுகிறார்

 

"இன்னும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா 100 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் நேரத்தில் இப்போது முதல் முறையாக வாக்களிப்பவர்கள், இந்திய சமூகத்தின் முக்கிய வாக்காளர்களாகவும் கருத்து உருவாக்குபவர்களாகவும் வாய்ப்புப் பெறுவார்கள்" - டாக்டர் ஜிதேந்திர சிங்

 

மத்திய இணை அமைச்சர் (தனி பொறுப்பு) அறிவியல் & தொழில்நுட்பம்; புவி அறிவியல், பிரதமர் அலுவலகத்திற்கான இணை அமைச்சர், பணியாளர்கள், பொது குறைதீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி துறைக்கான இணை அமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று 18 வயதை எட்டிய முதல் முறை வாக்காளர்கள் மோடி காலத்தின் குழந்தைகள் என்றும் அது அவர்களின் மிகப்பெரிய ஆசீர்வாதம் மற்றும் நன்மை என்றும் கூறினார்.

 

உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் சட்டமன்றத் தொகுதியில் முதல்முறை வாக்காளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த புதிய இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவதால் அவர்கள் இந்தியாவில் மோடி தலைமையிலான நம்பிக்கை மற்றும் முன்னேற்றம் நோக்கிய பயணம் நிறைந்த ஆட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று கூறினார். சுதந்திரத்திற்குப் பிறகு முந்தைய இரண்டு தலைமுறை இளைஞர்கள் அவநம்பிக்கை மற்றும் மரியாதை இல்லாத சூழ்நிலையில் இருந்த அவலத்திற்கு இது முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்று அவர் கூறினார். நாட்டில் தங்கியிருப்பதன் மூலம் தமக்கான எதிர்கால நம்பிக்கையை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றனர் என அமைச்சர் குறிப்பிட்டார்.

 

தற்போது அந்த போக்கு மாறிவிட்டது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்திய இளைஞர்கள் மரியாதையுடன் பார்க்கப்படுவது மட்டுமல்லாமல் இந்தியாவை விட்டு வெளியேறிய இளைஞர்களும் திரும்பி வந்து தங்களுக்கு முன்னால் உள்ள வாய்ப்புகளை ஆராய விரும்புகிறார்கள்.

 

இந்தியா சுதந்திரம் அடைந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு 100 ஆண்டுகளைக் கொண்டாடும் நேரத்தில் இப்போது முதன்முறையாக வாக்களிப்பவர்கள் இந்திய சமூகத்தின் முக்கிய வாக்காளர்களாகவும் கருத்து உருவாக்குபவர்களாகவும் மாறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 

இளைஞர் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கூறியதை மேற்கோள் காட்டி, "இந்தியாவின் இளைஞர்களை உலகம் முழுவதும் நம்பிக்கையுடன் பார்க்கிறது. ஏனென்றால் நீங்கள் நாட்டின் வளர்ச்சி இயந்திரம், இந்தியா உலகின் வளர்ச்சி இயந்திரம்" என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார், புதிய இந்தியா வெளிப்படைத்தன்மை எதிர்காலம் மற்றும் அதன் முற்போக்கான கருத்துக்களுக்கு பெயர் பெற்றது. நமது நாட்டின் வளர்ச்சி இளைஞர்களின் தோள்களில் உள்ளது.

 

கடந்த 8 ஆண்டுகளில் அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், முதலில் இந்தத் திட்டங்கள் அனைத்தும் இளைஞர்களை மையமாகக் கொண்டவை என்றும், இரண்டாவதாக அனைத்து இளைஞர்களுக்கும் சுய பயிற்சியை அறிமுகப்படுத்தினாலும் சரிசமமான களத்தை வழங்குவதில் அக்கறை காட்டுவதாகவும் கூறினார். அதிகாரிகள் மூலம் சான்றளிக்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வந்து சுயமாக சான்றளிக்கும் முறையை ஏற்படுத்தியதுநேர்காணலை ரத்து செய்ததன் மூலம் பணிவாய்ப்பில் முறைகேடு எதற்கும் இடமில்லை என்றார்.

 

2015 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் செங்கோட்டையில் இருந்து "ஸ்டார்ட்-அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா" என்ற அழைப்பை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடியின் எதிர்கால நோக்கத்திற்கு டாக்டர் ஜிதேந்திர சிங் முழுப் பெருமையை வழங்கினார். இதன் விளைவாக இந்தியாவில் ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை 2014 இல் வெறும் 350 இல் இருந்து 2022 இல் 80,000 க்கும் அதிகமாக 85 யூனிகார்ன்களுடன் ($1 பில்லியன் மதிப்பு மற்றும் அதற்கு மேல்) அதிகரித்துள்ளது. இது இளைஞர்களுக்கான பாதைகளை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளது.

 

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்காலம் குறித்த பார்வை இருப்பதாகவும், அதனால்தான் இந்தியாவில் வளர்ந்து வரும் புதிய தலைமுறைக்கு அவர் சிறப்பு கவனம் செலுத்துவதாகவும் அது இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் என்று  டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

**********

AD/CJL/DL



(Release ID: 1913111) Visitor Counter : 175