எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

2022-23 நிதியாண்டில் செயில் நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக உற்பத்தியை எட்டியுள்ளது

Posted On: 01 APR 2023 5:06PM by PIB Chennai

மத்திய எஃகு அமைச்சகத்தின் கீழ் உள்ள மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய உருக்கு ஆணைய நிறுவனம்  (SAIL), 2023 மார்ச் 31 அன்று முடிவடைந்த 2022-23 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக  வருடாந்திர உற்பத்தியை எட்டியுள்ளது.

இந்தக் காலகட்டத்தில், நிறுவனம் 19.409 மில்லியன் டன்  சூடான உலோகம் மற்றும் 18.289 மில்லியன் டன் கச்சா எஃகு உற்பத்தியை முறையே 3.6% மற்றும் 5.3% வளர்ச்சியுடன்  பதிவு செய்துள்ளது. அதிக மதிப்பு கூட்டல் மற்றும் சிறப்பு ஸ்டீல்  உற்பத்தியில் கவனம் செலுத்தி நிறுவனம் தொடர்ந்து பல ஆண்டுகளாக அதன் உற்பத்தியை அதிகரித்து வருகிறது.

 

 

**************

AD/PKV/DL(Release ID: 1912914) Visitor Counter : 109