எரிசக்தி அமைச்சகம்

எரிசக்தி முறை மாற்றத்துக்கான 2-வது பணிக்குழுக் கூட்டம் குஜராத் காந்திநகரில் 2023 ஏப்ரல் 2 முதல் 4 வரை நடைபெறவுள்ளது

Posted On: 31 MAR 2023 5:28PM by PIB Chennai

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ்  எரிசக்தி நடைமுறை மாற்றத்துக்கான 2-வது  பணிக்குழு (ETWG) கூட்டம் குஜராத்தின் காந்திநகரில் 2023 ஏப்ரல்  2 முதல் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. மூன்று நாள் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், ஜி20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த 2வது கூட்டத்தில் முந்தைய கூட்டத்தின் முக்கிய அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றை முன்னெடுத்து செல்வது தொடர்பான விவாதங்கள் நடைபெறும். முக்கிய அம்சங்களில் ஒருமித்த கருத்தை உருவாக்குவது தொடர்பாக விவாதங்கள் நடைபெறும்.

பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட தொடர்பான கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

எரிசக்தி நடைமுறை மாற்றம் தொடர்பான முதலாவது பணிக்குழுக் கூட்டம் பெங்களுருவில் 2023 பிப்ரவரி 5 முதல் 7ம் தேதி வரை நடைபெற்றது,

அதில் தொழில்நுட்ப இடைவெளிகளை நிவர்த்தி செய்வதன் மூலம் எரிசக்தி முறை  மாற்றம், எரிசக்தி முறை மாற்றத்திற்கான நிதியுதவி, எதிர்காலத்திற்கான எரிபொருள்கள் உள்ளிட்டவை தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன.

***

SM/PLM/RS/KRS



(Release ID: 1912686) Visitor Counter : 127


Read this release in: English , Gujarati , Urdu , Hindi