கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சகார் சேது என்னும் மொபைல் செயலியை மத்திய கப்பல் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் அறிமுகம் செய்து வைத்தார்.

प्रविष्टि तिथि: 31 MAR 2023 4:57PM by PIB Chennai

சகார் சேது என்னும்  மொபைல் செயலியை மத்திய கப்பல் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த பொபைல் செயலியில் சேவை பட்டியல், பொதுவான செயல்பாட்டு நடைமுறைகள், வங்கி உத்தரவாதம், சான்றளிப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், சுங்கத்தரகர்கள் உள்ளிட்டோருக்கு சரக்கு கப்பல் தொடர்பான தகவல்களையும், பரிவர்த்தனை தொடர்பான விவரங்களையும் துல்லியமாக இந்த செயலி வழங்கும். தேசிய கடல்சார் சரக்கு போக்குவரத்து தளம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாகர் சேது செயலியின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய, மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் இந்த துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த செயலி பெரிதும் பயனுள்ளதாக விளங்கும் என்று கூறினார்.

இந்தநிகழ்ச்சியில் கப்பல் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், கப்பல் துறை செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

***

 AD/PLM/RS/KRS


(रिलीज़ आईडी: 1912646) आगंतुक पटल : 275
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Odia , Telugu