சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கு விரிவான சுகாதார மற்றும் மருத்துவ ஏற்பாடுகள்

Posted On: 29 MAR 2023 5:34PM by PIB Chennai

ஹஜ் புனிதப் பயணம்  மேற்கொள்வோருக்கு விரிவான சுகாதார மற்றும் மருத்துவ ஏற்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் இருந்து 25 முதல் 35 லட்சம் பேர்  ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா அரசு அனுமதி வழங்குகிறது.  உலகில் ஹஜ் புனித பயணத்திற்கு அதிக யாத்திரிகர்களை அனுப்பும் 3-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது.

இந்த  ஆண்டு இந்தியாவிலிருந்து  1,75,025 பேருக்கு  ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கான வசதிகள் குறித்து கடந்த 3 மாதங்களில் சிறுபான்மையினர் நல அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் 10 கூட்டங்களை நடத்தியுள்ளன.

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மார்ச்-21 ம் தேதி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது. தேர்வு செய்யப்பட்ட ஹஜ் பயணிகளுக்கு விரிவான மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புறப்படும் விமான நிலையங்களில் சுகாதாரப் பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஏப்ரல் முதல் வாரத்தில் சவுதி அரேபியாவுக்கு மருத்துவக்குழுவை அனுப்பவும் சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்தக் குழு அங்கு மெக்கா, மதீனா, ஜெட்டா, அரஃபாத்  ஆகிய இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் தற்காலிக மருந்தகங்களை ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உள்ளது.

                                        ------------

AD/PLM/RS/KPG

 

 


(Release ID: 1912020) Visitor Counter : 825


Read this release in: English , Urdu , Punjabi , Telugu