சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் பொது மேம்பாட்டுத்திட்டம்

प्रविष्टि तिथि: 29 MAR 2023 5:07PM by PIB Chennai

சிறுபான்மையினர் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறதுஅறிவிக்கப்பட்ட 6 சிறுபான்மையினர் சமுதாயங்களின் நலனுக்காக நாடு முழுவதும் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களது சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.   திறன் மேம்பாட்டு அமைச்சகம்ஜவுளித்துறை அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் உள்ளிட்ட  அமைச்சகங்கள் மூலம் சிறுபான்மையினர், பொருளாதார ரீதியாக பின்தங்கியோர் மற்றும் விளிம்பு நிலை சமூகத்தினரின்  நலனுக்காக  பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 

பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம்  திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் அதிகமுள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. இந்த நிதி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டு, மாநில அரசுகளின் மூலம் திட்டம் செயல்படுத்தப்படுகிறதுநாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்  பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், 2022-23ம் நிதியாண்டில் இதன் நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

சிறுபான்மையினரின் கல்வி மேம்பாட்டுக்காக 10ம் வகுப்புக்கு முந்தையை கல்வி உதவித்தொகைத் திட்டம், 10ம் வகுப்புக்கு பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டம்  தகுதி அடிப்படையிலான உதவித்தொகைத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.

சிறுபான்மையினரின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு  ஆகியவற்றுக்காக பிரதமரின் விகாஸ் திட்டம்  செயல்படுத்தப்படுகிறது.  சிறுபான்மையனரின் மேம்பாட்டுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தத் தகவலை மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

 

***

AD/PLM/RS/KPG


(रिलीज़ आईडी: 1912017) आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Telugu