வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வளர்ச்சி அடிப்படையிலான அணுகுமுறையில் வலுவான நிதிகட்டமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது: நிதித்துறை இணையமைச்சர் திரு பகவத் காரத்

Posted On: 29 MAR 2023 4:49PM by PIB Chennai

மும்பையில் நடைபெறும் ஜி20 வர்த்தகம் மற்றும் முதலீட்டு பணிக்குழுக் கூட்டத்தில் நிதித்துறை இணையமைச்சர்  திரு பகவத் காரத் இன்று பங்கேற்று உரையாற்றினார். வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.

வளர்ச்சி அடிப்படையிலான அணுகுமுறையில் வலுவான நிதிக்கட்டமைப்பை ஏற்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.  நாட்டின் ஏற்றுமதி பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். அனைவருக்கும் வங்கி சேவைகளை வழங்குவதில் ஜன்தன் திட்டம் முக்கிய பங்காற்றியதாக அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 47 கோடியே 80 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மின்னணு பணப்பரிவர்த்தனை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். யுபிஐ பணப்பரிவர்த்தனை மூலம் 2022 டிசம்பர் மாதத்தில் 7.82 மில்லியன் பரிவர்த்தனைகள் ரூ.12.82 ட்ரில்லியன் மதிப்பில் நடைபெற்றதாகவும், இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான சாதனை என்றும் திரு பகவத் காரத் தெரிவித்தார்.

***

AD/PLM/RS/KPG



(Release ID: 1911984) Visitor Counter : 162


Read this release in: English , Urdu , Marathi , Hindi