தேர்தல் ஆணையம்
ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்/ தேர்தல் அட்டவணை
प्रविष्टि तिथि:
29 MAR 2023 2:59PM by PIB Chennai
பஞ்சாபின் ஒரு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் தேர்தல் அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பஞ்சாபின் ஜலந்தர் (தனி) மக்களவைத் தொகுதி, ஒடிசாவின் ஜர்சுகுடா சட்டப் பேரவைத் தொகுதி, உத்தரப் பிரதேசத்தின் சன்பே (தனி) சட்டப் பேரவைத் தொகுதி, . உத்தரப் பிரதேசத்தின் சுவார் சட்டப் பேரவைத் தொகுதி, மேகாலயாவின் சோஹியாங் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி ஆகியவற்றுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜலந்தர் மக்களவைத் தொகுதி மற்றும் ஜர்சுகுடா, சன்பே சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதன் உறுப்பினர்கள் காலமானதால் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. சுவார் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேகாலயாவின் சோஹியாங்கில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது அந்த தொகுதியைச்சேர்ந்த ஐக்கிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் காலமானதால், அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது தேர்தல் நடத்தப்படுகிறது.
ஒரு மக்களவைத்தொகுதி மற்றும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 10.05.2023 புதன்கிழமையன்று இடைத்தேர்தல் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் 13.04.2023 அன்று தொடங்குகிறது. 20.04.2023 அன்று மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை 23.04.2023 அன்று நடைபெறும். வேட்புமனுக்களை விலக்கிக்கொள்வதற்கான கடைசி நாள் 24.04.2023 என அறிவிக்கப்பட்டுள்ளது.
10.05.2023 அன்று தேர்தல் நடத்தப்பட்டு 13.05.2023 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
***
AD/PLM/RS/KPG
(रिलीज़ आईडी: 1911845)
आगंतुक पटल : 181