குடியரசுத் தலைவர் செயலகம்

விஸ்வபாரதி பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Posted On: 28 MAR 2023 6:26PM by PIB Chennai

சாந்திநிகேதனில் விஸ்வபாரதி பல்ரகலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (2023 மார்ச் 28)  கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிழக்குப் பகுதியில் மிக முக்கியமான நகரத்தின் வசதிகளை விட்டுவிட்டு, அந்நாட்களில் தொலைதூரப் பகுதியாக இருந்த சாந்திநிகேதனுக்கு வந்ததாக கூறினார். அனைவருக்கும், குறிப்பாக இளம் மாணவர்களுக்கு, இதில் ஒரு தகவல் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ரவீந்திரநாத் தாகூர் போன்ற முக்கியத் தலைவர்கள், பெரிய லட்சியங்களை அடைய வசதிகளை விட்டுவிட்டு சிரமங்களை அனுபவித்ததாக அவர் தெரிவித்தார். விஸ்வபாரதியின் இளம் மாணவர்கள் ரவீந்திரநாத் தாகூரின் வாழ்வில் இருந்து பலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். மாற்றத்தை உருவாக்க வேண்டும் எனில் வசதிகளில் இருந்து வெளியே வர வேண்டும் என அவர் கூறினார்.

இயற்கையே சிறந்த ஆசிரியர் என்ற குருதேவின் நம்பிக்கை இந்த நிறுவனம் வடிவமைக்கப்பட்ட விதத்தில் இருந்து பிரதிபலிக்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். மேற்கத்திய நாடுகளின் கல்வி முறையில் இருந்து வெளிவர வேண்டும் என ரவீந்திர நாத் தாகூர் விரும்பியதாக அவர் குறிப்பிட்டார். விஸ்வபாரதி மூலம், ஆன்மீகம் மற்றும் நவீன அறிவியல், பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றைக் கலந்து இயற்கைக்கு நெருக்கமான கற்றல் முறையை நமக்குப் பரிசாக அவர் அளித்துள்ளார் என குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

கல்வி என்பது படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், ஒரே மாதிரியான மற்றும் தொழில் முறைத் தன்மையை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது என்றும் ரவீந்திரநாத் தாகூர் விரும்பியதாக குடியரசுத் தலைவர் கூறினார். தாகூரின் கல்வித் தத்துவத்தைக் கடைப்பிடித்து விஸ்வபாரதி பல புகழ்பெற்ற கலைஞர்களையும் படைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுவதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

இந்திய அறிவுப் பாரம்பரியத்தில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் பெருமை அடைந்ததாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். அறியாமை, குறுகிய மனப்பான்மை, பாரபட்சம், எதிர்மறை எண்ணங்கள், பேராசை மற்றும் பிற தீயவற்றில் இருந்து விடுபடுவதே கல்வியின் உண்மையான குறிக்கோள் என்று அவர் கூறினார். விஸ்வபாரதி மாணவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் சிறந்த சமூகத்தை உருவாக்க உதவுவார்கள் என்று குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.

*********

SM/PLM/KRS

 



(Release ID: 1911596) Visitor Counter : 92


Read this release in: English , Urdu , Hindi , Bengali