மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

8-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலும் புதிய என்சிஇஆர்டி பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும்

Posted On: 27 MAR 2023 10:00PM by PIB Chennai

தேசிய கல்விக் கொள்கை 2020 அடிப்படையில் புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு மற்றும் புதிய பாடப்புத்தகங்கள் குறித்த உயர்மட்டக் கூட்டம் மத்திய கல்வியமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது.

கல்வித்துறை செயலாளர் திரு.சஞ்சய் குமார், என்சிஇஆர்டி மூத்த அதிகாரிகள், தேசிய பாடத்திட்ட கட்டமைப்புக் குறித்த தேசிய வழிகாட்டும் குழுவின் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளில் பாடப்புத்தகங்களை உருவாக்குமாறு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். பன்மொழி கல்வியை மேற்கொள்ளும் தேசிய கல்விக்கொள்கை 2020 கண்ணோட்டத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கை அமையும்.

என்சிஇஆர்டி உருவாக்கிய “மந்திரப் பெட்டி” என்னும் கற்றல் மற்றும் கற்பிக்கும் உபகரணம், கல்வி ஆதாரத்திற்கான வடிவில் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்றடைவதை முன்னெடுத்துச் செல்லும் என்று திரு.பிரதான் கூறினார். பல்வேறு புதுமையான கற்றல் – கற்பித்தல் பொருட்களை உருவாக்குவதில் படைப்புத் திறன் கொண்ட இளைஞர்களை இதில் இணைக்கும் வகையில், இந்த இயக்கத்தை பெரியளவில் மாற்றுவது அவசியமாகும் என அவர் வலியுறுத்தினார்.

***

(Release ID: 1911312)

AD/PKV/RR


(Release ID: 1911341) Visitor Counter : 153


Read this release in: English , Urdu , Hindi