குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரூ. 4,06,310 கோடி மதிப்பில் உத்தரவாதங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன

Posted On: 27 MAR 2023 3:45PM by PIB Chennai

2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், 69,04,649 உத்தரவாதங்கள் ரூ.4,06,310 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் 21 சதவீதம் எண்ணிக்கை அளவிற்கும், 14 சதவீதம் நிதி அளவிற்கும், மகளிரால் நடத்தப்படும் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 சதவீதம் எண்ணிக்கை அளவிற்கும், 3 சதவீதம் நிதி அளவிற்கும் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 5,93,863 ஒப்புதல்கள் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு 32,758 கோடி ரூபாய் மதிப்பில் கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது. 

இத்தகவலை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

***

AD/IR/RJ/KRS



(Release ID: 1911283) Visitor Counter : 113


Read this release in: English , Urdu , Punjabi , Telugu