பாதுகாப்பு அமைச்சகம்
2022-23-ம் நிதியாண்டிற்காக பெல் நிறுவனத்திடமிருந்து 2-வது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.224 கோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் பெற்றுக்கொண்டார்
Posted On:
27 MAR 2023 5:28PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சக பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 2-வது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.224,27,53,160.40-க்கான காசோலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்-கிடம் புதுதில்லியில் மார்ச் 27, 2023 அன்று வழங்கியது. 2022-23-ம் நிதியாண்டுக்காக பங்குதாரர்களுக்கு 2-வது இடைக்கால ஈவுத்தொகையாக 60 சதவீதத்தை (பங்கு ஒன்றுக்கு ரூ.0.60) வழங்க பெல் நிறுவனம் முடிவு செய்தது.
தொடர்ந்து 20-வது வருடமாக பெல் நிறுவனம் இடைக்கால ஈவுத்தொகையை வழங்குகிறது. முதலாவது இடைக்கால ஈவுத்தொகையாக பிப்ரவரி 2023-ல் 60 சதவீதம் பெல் நிறுவனம் வழங்கியது.
***
AD/IR/RJ/KRS
(Release ID: 1911234)
Visitor Counter : 138